பாக்கியாவுக்கு போட்டியாக புது பிசினஸில் களமிறங்கும் கோபி... வைரலாகும் புரோமோ!

Baakiyalakshmi serial
Baakiyalakshmi serial

சீரியல்களுக்கு ஊர்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்கள் சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர்.

அப்படி ரசிகர்களின் பேவரைட் ஆன ஒரு சீரியல் தான் பாக்கியலட்சுமி. 1000 எபிசோட்களை கடந்து சாதனை படைத்த பாக்கியலட்சுமி சீரியல் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.

ஒரு பக்கம் ஜெனி செழியன் டைவர்ஸ் பிரச்சனை ஓடி கொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் பாக்கியலட்சுமியின் புதிய ரெஸ்டாரண்ட் திறப்பு நிகழ்வு தான் அமோகமாக இருந்தது. மற்றொரு பக்கம் கோபி பிசினஸில் பிரச்சனையடைந்தது வீட்டிற்கு தெரியவர, வீட்டிலேயே கோபி முடங்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
"பெண்கள் எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும்" விமர்சனங்களுக்கு வரலட்சுமி சரத்குமார் பதிலடி!
Baakiyalakshmi serial

இந்த நிலையில், அடுத்த 4 நாட்களுக்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், கோபி தான் புதிய பிசினஸ் நடத்தவுள்ளதாகவும் அதற்கு ஈஸ்வரி கிச்சன்ஸ் என பெயர் வைத்துள்ளதாகவும் கூறுகிறார். அதற்கு எழில் என்ன கிச்சன் பக்கம் எங்கம்மாவுக்கு போட்டியா என கேட்கிறார். அதற்கு கோபி உங்க அம்மா எல்லாம் ஒரு ஆளாகூட மதிக்கல என கூற அதற்கு எழில் கோபப்படுகிறார்.

இது ஒரு புறம் இருக்க கோபி ஈஸ்வரி கிச்சன்ஸை தனது தாய், தந்தையை அழைத்து திறக்கிறார். இதனால் பாக்கியலட்சுமி கடையில் கூட்டம் குறைகிறது. கோபி கடையில் கூட்டம் படையெடுக்கிறது. இதற்காக கோபி என்ன சதி திட்டம் போட்டார் என தெரியவில்லை. இனி வரும் எபிசோட்களிலேயே அது தெரியவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com