நிலா மற்றும் சோழனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவமானப்படுத்தப்படும் சோழனின் சகோதரர்கள்..!

Ayyanar thunai
Ayyanar thunai
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தமிழ் தொடர்களில் 'அய்யனார் துணை'யும் ஒன்று. கனவுகளுடன் வாழும் ஒரு பெண்ணும், சவால்கள் நிறைந்த ஒரு குடும்பமும் இணையும் கதை இது. வழக்கமான மாமியார் மருமகள் கதைகளில் இருந்து மாறுபட்டு, குடும்ப உறவுகளின் பாசத்தையும், உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உயிரோட்டத்துடன் சென்று கொண்டிருக்கும் தொடர். ஆர். வெங்கடேஷ் பாபு மற்றும் வி.வைஷ்ணவி தயாரிப்பில் உருவாகியுள்ள, திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடரின் யதார்த்தமான கதைக்களம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கட்டிடக்கலைத் துறையில் தங்கப் பதக்கம் வென்ற, வெளிநாட்டில் படிக்க விரும்பும் நிலா என்ற பணக்கார வீட்டுப் பெண்ணைச் சுற்றியே கதை நகர்கிறது. நிலாவின் தந்தை அவளுக்குப் பிடிக்காத ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்ய, சூழ்நிலை காரணமாக நிலாவின் வாழ்க்கை சாதாரண பின்னணியைக் கொண்ட சோழன் என்ற ஓட்டுநருடன் இணைகிறது. சோழனின் குடும்பம் லாரி ஓட்டுனரான தந்தை நடேசன் மற்றும் சேரன், பாண்டியன், பல்லவன் ஆகிய மூன்று தம்பிகளைக் கொண்டது. தாயில்லாத அந்த ஆண்கள் மட்டுமே வாழும் அய்யனார் இல்லத்திற்குள் மருமகளாக நிலா நுழைந்த பிறகு அந்த குடும்பத்தில் ஏற்படும் நேர்மறையான மாற்றங்களும், அவர்கள் சந்திக்கும் சமூக சவால்களுமே கதையின் முக்கியப் பகுதியாகும். நிலாவின் லட்சியங்களுக்கு சோழன் செய்யும் தியாகங்களும், குடும்பப் பிரச்சினைகளை நிலா எதிர்கொள்ளும் விதமும் கதையை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்கின்றன.

வழக்கமான சண்டை மற்றும் வில்லத்தனங்களை விட, மெல்லிய உணர்வுகள், குடும்ப பாசம் மற்றும் நேர்மறையான சிந்தனைகளுக்கு இத்தொடர் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. குடும்பத்தில் நடக்கும் சிறு சிறு பிரச்சனைகளைத் தாண்டி, அனைவரையும் அனுசரித்துப் போகும் முதிர்ச்சியான கதாபாத்திரமாக நிலா சித்தரிக்கப்படுகிறார். சினிமாவுக்கு இணையான கதைக்களம் மற்றும் யதார்த்தமான வசனங்கள், வழக்கமான வில்லி, சதி போன்ற சலிப்பான விஷயங்கள் இல்லாமல், குடும்ப உறவுகளின் சிக்கல்கள் மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

Ayyanar thunai
Ayyanar thunai

நிலா மற்றும் சோழன் குடும்பத்தினருக்கு இடையே நடக்கும் வரவேற்பு விழா நிகழ்வுகள் முக்கிய கதையாக நகர்கின்றன. வரவேற்பு விழாவிற்கு சோழன் மற்றும் அவரது நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே வருவார்கள் என்று நிலா கூறியதை தேன்மொழி விமர்சிக்கிறார். இதன் காரணமாக சேரன் தனது உறவினர்களையும் விழாவிற்கு அழைக்க முடிவு செய்கிறார். சோழனின் சகோதரர்களை அவமானப்படுத்தும் நோக்கில், மனோகர் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு அறையை ஒதுக்குகிறார். தனது கணவர் குடும்பத்தினருக்கு முறையான உபசரிப்பு அளிக்காததைக் கண்டு கோபமடையும் நிலா, தேன் மொழியிடம் கடுமையாக கோபம் கொள்கிறார்.நிலாவுக்கு தெரியாமலேயே சோழனுடைய குடும்பத்தை நிலாவினுடைய குடும்பம் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மனோகரை எதிர்த்துப் பேசிய சோழன், நிலாவிற்கு ஒரு எளிய புடவையைத் தேர்வு செய்கிறார். ஆடம்பரமான புடவையைத் தவிர்த்து சோழனின் விருப்பத்திற்கு நிலா முன்னுரிமை கொடுத்ததால் தேன்மொழி கடும் அதிருப்தி அடைகிறார். தனது பெற்றோருக்கு எதிராகச் சென்று எடுத்த முடிவுகளால் தனக்கு ஏற்பட்ட மனவலியை நிலா சோழனிடம் பகிர்ந்து கொள்கிறார்.

நிலா தனது மெஹந்தி விழாவில் பிஸியாக இருந்தாலும், சோழனின் குடும்பத்தினரின் பாதுகாப்பையும் மரியாதையையும் நினைத்து கவலைப்படுகிறாள். மறுபுறம் தேன்மொழி அவளைத் தொடர்ந்து குறை கூறுவதால், நிலா அவருக்கு பதிலடி கொடுத்து கோபத்தை வெளிப்படுத்துகிறாள்.

சோழன் நிலா ரிசப்ஷனில் சேரன், பாண்டி, பல்லவனை வேலைக்காரர்கள் மாதிரி ரிசப்ஷனில் வேலை வாங்குகிறார் மனோகர். பல போராட்டங்களுக்குப் பிறகு நிலா மற்றும் சோழன் இருவரும் மகிழ்ச்சியுடன் மாலை மாற்றிக் கொள்கின்றனர். நிலாவின் குடும்பத்தைச் சேர்ந்த மனோகர், சோழனின் அண்ணனான சேரன் மற்றும் அவரது குழுவினரை உறவினர்கள் முன்னிலையில் கடுமையாக அவமானப்படுத்துகிறார். மது போதையில் இருக்கும் தந்தை நடேசன், இந்த சுப நிகழ்ச்சியைக் கெடுத்து விடுவாரோ என்ற பயத்திலும் கவலையிலும் சேரன் ஆழ்ந்திருக்கிறார். நிலாவின் அப்பாவும் அண்ணனும் சோழன் குடும்பத்தை கேவலப்படுத்தறதா எண்ணி மகளோட வெறுப்பை சம்பாதிக்கப் போகிறார்கள்!

நிலா மற்றும் சோழனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நல்லபடியாக நடக்குமா?

இதையும் படியுங்கள்:
ENT பிரச்னை: நாம் செய்யும் தவறுகள் என்ன? ENT நிபுணர் தரும் 'நச்சுனு 4' பதில்கள்!
Ayyanar thunai
logo
Kalki Online
kalkionline.com