அய்யனார் துணை சீரியலில், நான்கு அண்ணன் தம்பிகளும் ஒற்றுமையாக இருந்து வந்தார்கள். ஆனால், நடேசன் சோழனை ஏற்றிவிடுவதால், அவர்களுக்குள் மனஸ்தாபங்கள் வர ஆரம்பித்துவிட்டது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில், சோழன் நிலாவுக்கு பைக் ஒன்றை சர்ப்ரைஸாக வாங்கி கொடுக்கிறார். ஆனால், பைக் ஓட்டத் தெரியாத நிலாவுக்கு பல்லவன் பயிற்சி அளிக்கிறார். இதைப் பார்த்த நடேசன், சோழனிடம், "நீ கடைசி வரை வேடிக்கை மட்டுமே பார்க்கப் போகிறாய். அவர்கள் நிலாவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து திருமணம் செய்து வைத்து விடுவார்கள்" என்று சோழனின் மனதை புண்படுத்துகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த சோழன், நிலாவின் மனதில் எப்படியாவது இடம்பிடிக்க வேண்டும் என முடிவெடுத்து, பைக் பயிற்சி கொடுப்பதற்காகச் செல்கிறார். எதிர்பாராத விதமாக, நிலா பைக்கிலிருந்து கீழே விழுந்து காயமடைகிறார். இதற்குக் காரணம் சோழன்தான் என பல்லவன் கூற, சேரன், சோழனைத் திட்டிவிடுகிறார்.
இதனால் குழப்பமும் எரிச்சலும் அடைந்த சோழன், அனைவரும் தன்னைத் திட்டுவது ஏன் என நினைக்கிறார். இதற்கிடையில் மறுபடியும் பல்லவனும் பாண்டியனும் நிலாவுக்கு பைக் பயிற்சி கொடுக்கிறார்கள். அப்போது, தானும் பயிற்சி அளிக்க வருவதாக சோழன் கூற, நிலா, "நீங்க வேண்டாம், பல்லவனும் பாண்டியனும் பார்த்துக் கொள்வார்கள்" என்று மறுத்து விடுகிறார்.
இதனால் மேலும் கோபமடைந்த சோழனிடம், நடேசன் மீண்டும், "நிலா உன்னை வேண்டாம் என்று சொல்லும் போது மற்றவர்கள் ஏன் வாய்மூடி இருக்க வேண்டும்? உனக்கு ஆதரவாகப் பேசியிருக்கலாமே! நீ தனியாகத்தான் இருக்கப் போகிறாய்" என்று சொல்லி சோழனின் மனதை மேலும் காயப்படுத்துகிறார். இதனால், பல்லவன், பாண்டியன், சேரன் மீது கோபப்படும் சோழன், நிலாவை எப்படியாவது தன் மனைவியாக்க முயற்சிக்கிறார். ஆனால், சோழன் தனது சகோதரர்கள் மீது கோபப்பட்டு அவர்களுக்குள் இதனால் சண்டை பிறக்கும் வாய்ப்பிருக்கிறது.
சகோதரர்களுக்குள் இனி சண்டை ஏற்படுமா ? சேரன் இதை எப்படி சமாளிக்க போகிறார்..? நிலா என்ன முடிவு எடுப்பார் என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..