விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில், நிலா முதல் நாள் வேலைக்கு போகிறார். மேலும் பல்லவன் அம்மா குறித்தான ரகசியம் வெளிவரப்போவதுபோல் காட்டப்படுகிறது.
நிலா, முதல் நாளாக வேலைக்குச் செல்லும் அலுவலகத்தில் அவருக்கு கேக் வெட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அப்போது அந்த நிறுவனத்தின் இன்னொரு உரிமையாளராக வரும் நபர் தான், 'பாக்கியலட்சுமி' தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்தவர். இந்த தொடரில், அவரது கதாபாத்திரம் நிலாவுக்கு ஜோடியாகவும், சோழனுக்குப் போட்டியாகவும் அமைய வாய்ப்புள்ளது.
நிலா அலுவலகத்தில் இருக்கும்போது, பல்லவனும், சேரனும் அவருக்கு தொலைபேசி மூலம் பேசி நலம் விசாரிக்கின்றனர். பிறகு சோழன், நிலாவை அழைத்துச் செல்ல அலுவலகம் வருவதாகக் கூறுகிறார். ஆனால் நிலா, அவர் வர வேண்டாம் என்றும், தானே வீட்டிற்கு வருவதாகவும் சொல்கிறார். அப்போது நிலாவுடன் பணிபுரியும் சக ஊழியர் ஒருவர், நிலாவுக்குத் திருமணம் ஆகிவிட்டதா என்றும், எங்கு தங்கியிருக்கிறார் என்றும் கேட்கிறார். அதற்கு நிலா, தனக்குத் திருமணம் ஆகவில்லை என்றும், உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாகவும் பதிலளிக்கிறார்.
வேலை முடிந்ததும், நிலாவும் அவரது தோழியும் பேசிக்கொண்டு வரும்போது, எதிர்பாராத விதமாக பல்லவனின் அம்மாவைச் சந்திக்கிறார். அவரை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று குழப்பத்துடன் வீட்டுக்கு வருகிறார் நிலா. பிறகு நினைவுக்குக் கொண்டு வந்து, அவர் பல்லவனின் அம்மா என்பதை உறுதி செய்கிறார்.
உடனே நடேசனிடம், "பல்லவனின் அம்மா இங்கேதான் இருக்கிறாரா? அப்படியானால் ஏன் பல்லவனிடம் அம்மாவைப் பற்றி சொல்லாமல் இருக்கிறீர்கள்? நான் இன்று அவர்களைப் பார்த்தேன்" என்று பல கேள்விகளைக் கேட்கிறார். ஆனால் நடேசன் எந்தப் பதிலும் சொல்லாமல் அங்கிருந்து விலகிவிடுகிறார்.
இதன் மூலம் பல்லவனின் அம்மா குறித்த ரகசியம் விரைவில் வெளியாகும் என்பது உறுதியாகிறது. அதே சமயம், நிலா தனது அலுவலகத்தில் பாஸாக இருக்கும் ராகவ் என்பவருடன் நட்பு ரீதியாகப் பழகத் தொடங்குகிறார். இது சோழனின் வாழ்க்கையில் பல சிக்கல்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.