
செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இன்றைய சூழலில் ஐடி துறை துவங்கி, மருத்துவத்துறை வரையில் பல வேலை வாய்ப்புகள் மாயமாகி வருகி ன்றன. தொழில் நுட்ப முன்னேற்றம் காரணமாக அடுத்த தலைமுறை எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. அந்த வகையில் என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் அடுத்து மாணவர்கள் படிக்க வேண்டிய துறைகள் குறித்து கூறியதை இப்பதிவில் காண்போம்.
2 முக்கிய துறைகள்
அடுத்த தலைமுறையினர் அதாவது இன்றைய மாணவர்கள் அடிப்படை அறிவியல், குறிப்பாக இயற்பியல் மற்றும் கணிதத்தில் கவனம் செலுத்த வேண்டும் என டெக்துறையில் பெரும் புரட்சி செய்த எலான் மஸ்க் மற்றும் ஜென்சன் ஹூவாங் வலியுறுத்துகின்றனர். ஆகவே, இவர்களின் பரிந்துரை தொழில்நுட்ப உலகின் எதிர்காலப் போக்குகளை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.
தற்போதைய செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் சாப்ட்வேர் மற்றும் கோடிங் ஆகியவை அடுத்த 10 வருடங்களில் அதாவது சாப்ட்வேர் டெவலப்மெண்ட் என்பது ஒரு எளிய திறனாக கருதப்படும் என்பதால் அடிப்படை இயற்பியல் மற்றும் கணிதத்தில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பது இந்த இரு வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
AI களியாட்டம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் (LLM) தொடர்ந்து அதன் திறன்கள் மேம்பட்டு வருவதால், கோடிங் எழுதுவது மற்றும் டீபக்கிங் செய்வது போன்ற அடிப்படை புரோகிராமிங்கை இந்த ஏஐ கருவிகள் தானாகவே சிக்கலான மென்பொருள் பணிகளை கையாளும் திறனைப் பெற்று இருக்கும் என்பதால் கோடிங் செய்பவர்களுக்கு தற்போது இருக்கும் மதிப்பும், வருமானமும் கட்டாயம் பத்து வருடங்கள் கழித்து இருக்காது.
புதிய கண்டுப்பிடிப்பு
சிறந்த கோடிங் செய்பவர்களிடமிருந்து அடுத்த இன்னோவேஷன் அலை என்பது இதனால் வராது என்பது எலான்மஸ்க் ஜென்சன் ஹூவாங் இருவரும் தீவிரமாக நம்புகின்றனர். உலக இயக்கத்தை புரிந்து கொள்ளும் சிந்தனையாளர்களிடமிருந்து புரட்சிகரமான ராக்கெட் கட்டமைப்பு, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு உருவாக்கம் என எந்தத் துறையாக இருந்தாலும் வெற்றி பெறுவதற்கு அறிவியல் மற்றும் லாஜிக் அடிப்படையிலான அறிவு கொண்டவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்பதால் அடிப்படை இயற்பியலையும், கணிதத்தையும் இவர்கள் முன்மொழிகின்றனர்.
Strong Conceptual Thinking, Creative Problem-Solving மற்றும் புதுமையான விஷயங்களை உருவாக்கும் அறிவியல் திறன் மற்றும் தொழில்நுட்பத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு ஏஐ அல்லது ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் கை கொடுக்காது என்பதோடு அடிப்படை அறிவே அவசியமாகிறது.
அடிப்படை கோட்பாடுகளை அறிந்தவர்கள் மட்டுமே உண்மையான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். இந்த அணுகுமுறை, தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை மறுவரையறை செய்யும் வகையில் இருக்கிறது.
Physical AI
பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பதை இன்றைய மாணவர்கள் அறிந்து கொள்வதால், இயந்திரங்களுடன் பேசும் மாணவர்கள் இயந்திரங்களுக்கு உண்மையான புதிய அறிவை கற்பிக்க முடியும். இதை Physical AI என என்விடியா ஜென்சன் ஹுவாங் கூறுகிறார்.
என்விடியா ஜென்சன் ஹுவாங் சீன தலைநகர் பெய்ஜிங் நகரில் பேசும்போது Physical AI-ல் கவனம் செலுத்த வேண்டும் எனவும், எலான் மஸ்க், டெலிகிராம் சிஇஓ எழுதிய பதிவில் Physics (with math) என்ற 3 சொற்களில் தனது மொத்த கருத்தையும் மாணவர்களுக்கு அறிவுரையாக முன்மொழிந்தார்.
ஆகவே, மாணவர்களே அடுத்து படிக்கும் போது மேற்கூறிய கருத்துக்களை கவனத்தில் கொண்டு துறையை தேர்வு செய்யுங்கள்.