விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் கார்த்திகாவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. இதில் யாருக்கும் தெரியாமல் சோழன் கலந்துக்கொண்டு அலப்பறை செய்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளின் கதையாக அமைந்துள்ளது. ஆண்கள் மட்டுமே இருக்கும் வீட்டில் ஒரு பெண் மருமகளாக வந்திருக்கிறார். அதுவும் பணக்கார வீட்டு பெண். அவர் வீட்டுக்கு வந்ததும், வீட்டில் ஒரு கலை வந்திருக்கிறது. இதற்கிடையே வெகுநாட்களாக சேரனுக்கு பெண் அமையாமல் இருந்து வந்தது. இதற்கு காரணம் ஒரு பெண் கூட இல்லாத வீட்டில், ஐந்து ஆண்கள் இருக்கும் ஒரு வீட்டில் ஒரு பெண்ணை எப்படி கொடுப்பது என்று அனைவரும் விலகிப் போய்விட்டனர். இதனையடுத்து சோழனை திருமணம் செய்துக்கொண்டு அந்த வீட்டிற்குள் நிலா வந்ததும் நிலை மாறியது.
இப்படியான நிலையில்தான், நிலா வீட்டிற்கு மூன்று மருமகள்களை வரவழைத்துவிட்டு, தான் தப்பிவிட வேண்டும் என்பதற்காக, சேரனுக்கு திருமண ஏற்பாடு செய்கிறார்.
அதாவது சேரனின் மாமா மகள் கார்த்திகா சேரனை காதலிக்கிறார் என்பது தெரிந்து ஒரு ப்ளான் போடுகிறார். வீட்டைவிட்டு ஓடி வந்துவிட கூறிவிடுகிறார். அதேபோல் கார்த்திகாவும் வரும்போது அவரது அம்மா பிடித்து வைத்துவிடுகிறார். சேரன் கல்யாணம் கோவில் வரை வந்து நின்றுவிடுகிறது. இதனால், மனமுடைந்துபோன நிலா கதறி அழுகிறார். சேரன் எவ்வளவோ சமாதானம் செய்கிறார். ஆனால், நிலாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இப்படியான நிலையில், கார்த்திகாவிற்கு நிச்சயம் ஆகிறது. அப்போது மாஸ்க் போட்டு யாருக்கும் தெரியாமல் வந்த சோழன், பிறகு கார்த்திகாவுடன் சேர்ந்து போட்டோ எடுக்கும்போது கார்த்திகாவிடம் எங்களை ஒரு நாள் முழுவதும் கோவிலில் காக்க வைத்துவிட்டு நீ இங்கே சந்தோசமாக நிச்சயதார்த்தத்திற்கு தயாராகி விட்டாயா?? நல்ல வேலை எங்க அண்ணன் உன்னிடமிருந்து தப்பித்து விட்டார். என்று கூறுகிறார்.
மறுபக்கம் நிலா பயந்துக்கொண்டு இருக்கிறார், சோழன் எங்கே மாட்டிக்கொள்வாளோ என்று. ஆனால், அண்ணன் இதில் கெட்டிகாரன் என்று சொல்லும்போது, சரியாக சோழன் வந்துவிடுகிறார். அனைவருக்கும் மாப்பிள்ளையின் போட்டோவை காண்பிக்கிறார். அனைவரும் மாப்பிள்ளையை கிண்டல் செய்கிறார்கள். அப்போதும் சேரனும் அங்கு வந்து போட்டோவை பார்க்கிறார், பின் ஏன் கார்த்திகாவிற்கு இப்படி ஒரு மாப்பிள்ளையை பார்த்திருக்கிறார்கள் என்று ஆரம்பித்தார். சேரன் மனசு கொஞ்சம் குளிர ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் அங்கு இருப்பவர்களுக்கும் சந்தோசம் வந்துவிட்டது.