அய்யனார் துணை: நிலாவின் சுயநலம்… சேரன் கேட்ட உதவி… வெளிவந்த சோழனின் உண்மை!

Ayyanar thunai
Ayyanar thunai
Published on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில், நிலாவின் சுயநலத்தால் சேரன் கதிகலங்கி நிற்கிறார். இதற்கிடையே சோழனின் ஒரு பொய்யும் வெளிவந்திருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளின் கதையாக அமைந்துள்ளது. ஆண்கள் மட்டுமே இருக்கும் வீட்டில் ஒரு பெண் மருமகளாக வந்திருக்கிறார். அதுவும் பணக்கார வீட்டு  பெண். அவர் வீட்டுக்கு வந்ததும், வீட்டில் ஒரு கலை வந்திருக்கிறது.

இதற்கிடையே வெகுநாட்களாக சேரனுக்கு பெண் அமையாமல் இருந்து வந்தது. இதற்கு காரணம் ஒரு பெண் கூட இல்லாத வீட்டில், ஐந்து ஆண்கள் இருக்கும் ஒரு வீட்டில் ஒரு பெண்ணை எப்படி கொடுப்பது என்று அனைவரும் விலகிப் போய்விட்டனர்.

இதனையடுத்து சோழனை திருமணம் செய்துக்கொண்டு அந்த வீட்டிற்குள் நிலா வந்ததும் நிலை மாறியது.

இப்படியான நிலையில்தான், நிலா வீட்டிற்கு மூன்று மருமகள்களை வரவழைத்துவிட்டு, தான் தப்பிவிட வேண்டும் என்பதற்காக, சேரனுக்கு திருமண ஏற்பாடு செய்கிறார்.

அதாவது சேரனின் மாமா மகள் கார்த்திகா சேரனை காதலிக்கிறார் என்பது தெரிந்து ஒரு ப்ளான் போடுகிறார். வீட்டைவிட்டு ஓடி வந்துவிட கூறிவிடுகிறார். அதேபோல் கார்த்திகாவும் வரும்போது அவரது அம்மா பிடித்து வைத்துவிடுகிறார். சேரன் கல்யாணம் கோவில் வரை வந்து நின்றுவிடுகிறது. இதனால், மனமுடைந்துபோன நிலா கதறி அழுகிறார். சேரன் எவ்வளவோ சமாதானம் செய்கிறார். ஆனால், நிலாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இதையும் படியுங்கள்:
வீட்டுப் பல்லிகளுக்கு விஷம் உண்டா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!
Ayyanar thunai

சோழன் நிலாவுக்கு ஆறுதல் கூறுகிறார். அப்போது நிலா, நான் எப்படியும் இந்த வீட்டை விட்டுப் போய்விடுவேன். அப்பொழுது யாரும் இந்த குடும்பத்தில் பெண்கள் தங்காத வீடு என்று சொல்லிட கூடாது. அதனால் மற்றவர்கள் எல்லாத்துக்கும் கல்யாணம் நடந்து விட்டால் மூன்றாவது மருமகள் சண்டை போட்டு வீட்டை விட்டு போய்விட்டார் என்று ஊர் பேசிவிடும். அதற்காகத்தான் சேரன் அண்ணாவுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று முயற்சி எடுத்தேன்.” என்று கூறுகிறார்.

இதனையடுத்து நடேசன் மூலம் சோழன் ஓனர் இல்லை, அங்கு வேலைப் பார்க்கும் ட்ரைவர் என்பது தெரியவந்து நிலா கடும் சினம் கொள்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com