போலீஸ் ஸ்டேஷன் சென்ற மதிக்கு நீதி கிடைத்ததா..? சுரேஷுக்கு வேலை போகுமா?

அழகே அழகு
அழகே அழகு source:hotstar
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அழகே அழகு தொடர், மாறுபட்ட குணங்களைக் கொண்ட இரு மருமகள்களான அழகுமலர் மற்றும் அழகுமதி ஆகியவர்களின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டது. ஆணாதிக்கம் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு கூட்டுக் குடும்பத்திற்குள் முற்றிலும் மாறுபட்ட குணங்களைக் கொண்ட இரண்டு மருமகள்கள் நுழைந்த பிறகு நடக்கும் மாற்றங்களே இத் தொடரின் சுவாரஸ்யமான போக்காகும்.

பாரதி கண்ணம்மா, ராஜா ராணி போன்ற சூப்பர்ஹிட் சீரியல்களைக் கொடுத்த இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்க விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆண் ஆதிக்கத்தை எதிர்த்து, தங்கள் கூட்டுக் குடும்பத்தில் இவர்கள் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள் என்பதை இத்தொடர் மிக அழகாக சித்தரிக்கிறது. வீட்டு வேலைகளைப் பொறுப்பாக பார்த்துக் கொண்டு குடும்பத்தின் மரபுகளை மதிக்கும் அமைதியான மருமகளாக அழகுமலரும், படித்து வேலைக்குச் செல்லும், தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை மிக்க நவீன மருமகளாக அழகுமதியும் மிக அழகாக நடிப்பில் மிளர்கிறார்கள்.

azhage azhage
azhage azhage

தற்போதைய எபிசோடுகளில் மாமியாரின் ஆதிக்கத்தை எதிர்த்து மதி கேள்வி கேட்க, இதனால் கோபமடையும் மாமியார் நெஞ்சுவலி நாடகம் ஆடுகிறார். சுரேஷ் அவளை மன்னிப்பு கேட்க சொல்லி வற்புறுத்த அவளோ தன் மீது எந்த தவறும் இல்லை என்பதில் உறுதியாக இருந்து மன்னிப்பு கேட்க மறுக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் மதியை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார். மதியும் வீட்டை விட்டு வெளியேறுகிறார். வீட்டை விட்டு வெளியேறிய மதி, நியாயம் கேட்டு வீட்டு வாசலையே அமர்ந்து போராட்டம் நடத்த, மதியின் அப்பா அவளை வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறார்.

மாமியாரின் சூழ்ச்சிகளால் மதியின் தைரியமான கேள்விகள் குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்த, நேர்மையான குணமுடைய மலருக்கும் மதிக்கும் இடையே ஒரு சிறிய விரிசல் ஏற்படுகிறது. மதியின் அதிரடியான போராட்டமும், அமைதியாக இருந்த மலர் தன் கணவனின் மௌனத்தை எதிர்த்துப் பேசத் தொடங்கியிருப்பதும் இத்தொடரை விறுவிறுப்பான கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. மதி நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று தன் கணவரைப் பற்றி புகார் கொடுக்கிறாள். அடிப்பதற்கு கை ஓங்குவது, வீட்டை விட்டு துரத்துவது, போனில் மிரட்டுவது என்று செய்யும் என் கணவரை ஒரு பெண்ணா நான் என்ன பண்ண வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டரா பதில் சொல்லுங்க என்று தன் கணவரிடமே கம்ப்ளைன்ட் கொடுக்கிறாள். அந்த சமயத்தில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் மதிக்கு இடையில் உள்ள பிரச்சனையை அறிந்து கொண்டு, சுரேஷிடம் அவரின் பெற்றோரை ஸ்டேஷனுக்கு வரச் சொல்கிறார். சுரேஷ் டென்ஷனுடன் தன் மாமாவிற்கு ஃபோன் செய்து நடந்த விஷயத்தைக் கூறி விட மாமாவும் சுரேஷ் வீட்டிற்குச் சென்று அவர்களின் பெற்றோர்களை ஸ்டேஷனுக்கு வருமாறு கூறுகிறார். வழக்கம் போல் அழுது ஆகாத்தியம் செய்யும் மாமியார் கடைசியில் ஸ்டேஷனுக்கு வரத் தயாராகிறார்.

ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் முன்பு மதியைப் பற்றி குறை கூறி, அவள் மட்டு மரியாதை இல்லாமல் பேசுகிறாள் என்றும், அவள் பேசிய பேச்சுக்கு அம்மாவை ஏன் எதிர்த்து பேசுகிறாய் என்று சுரேஷ் சாதாரணமாகத்தான் கேட்டான். எப்பவும் பொறுமையாகத் தான் இருப்பான்.ஏதோ ஒரு கோபத்தில் வெளியே போ என்று சொல்லிவிட்டான். இவளும் அக்கம் பக்கத்து வீட்டில் எங்களை அசிங்கப்படுத்தத் தான் இப்படி செய்கிறாள் என்று கூற, இன்ஸ்பெக்டரோ என்ன இருந்தாலும் மருமகளை வீட்டை விட்டு போகச் சொன்னது தப்பு தானே! அத்துடன் உங்கள் மகன் அவங்க மீது கையும் ஓங்கி இருக்கிறான். இந்தப் பெண்ணோ கம்ப்ளெயின்ட் கொடுப்பேன் என்று உட்கார்ந்து இருக்கிறாள். நான் கம்ப்ளைன்ட் எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா? உங்கள் மகனுக்கு வேலை போய்விடும் என்கிறார். மதியை உள்ளே கூப்பிட, அவளை இன்ஸ்பெக்டர் முன்பே மாமியார் மாமனார் இருவரும் கோபப்பட, இன்ஸ்பெக்டரோ போதும் எனக்கு முன்பே இப்படி பேசுபவர்கள் வீட்டில் எப்படி நடந்து கொள்வீர்கள் என்று தெரியும் என்று கண்டிப்பாக கூறியதுடன் மதியைப் பார்த்து ஏதேனும் பிரச்சினை என்றால் உடனே என் நம்பருக்கு கால் பண்ணு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இவளை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் ஏதேனும் பிரச்சினை என்றால் உடனே எனக்கு கால் பண்ணி சொல்லுமா என்று மதியிடம் கூற அவர்கள் அனைவரும் வீட்டிற்கு செல்கிறார்கள்.

தங்கராஜ் தன் மனைவியிடம் மதியை அழைத்துக் கொண்டு நம் வீட்டிற்கு செல்லலாம். கொஞ்ச நாட்கள் அங்கு இருக்கட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூற மதியும் தங்கராஜ் வீட்டிற்கு செல்கிறாள். அங்கு தங்கராஜின் அம்மா புருஷன் வேலை பார்க்கிற இடத்திற்கு சாப்பாடு கொண்டு போகிற மனைவியைத் தான் பார்த்திருக்கிறேன். எல்லா நேரத்திலும் சண்டை போட்டுக்கிட்டு இருந்தால் எப்படி குடும்பம் நடத்துவீங்க என்று கூற, தங்கராஜ் தன் மனைவி ரேவதியிடம் மதியை மாடிக்கு அழைத்துச் செல்ல சொல்கிறார். கொஞ்சம் புத்திமதி சொல்லி அவளை அனுப்பி வைக்கலாம் என்று தங்கராஜ் தன் அம்மாவிடம் கூறுகிறார்.

சுரேஷுடன் மதி சமாதானம் ஆவாரா? இனி சுரேஷ் மதியை வீட்டுக்குள் அனுமதிப்பாரா? சுரேஷின் பெற்றோர் அவளை ஏற்றுக்கொள்வார்களா?

இதையும் படியுங்கள்:
மனதிற்கும் உடலுக்குமான மர்ம உறவு: மகிழ்ச்சியைத் தேடும் ரகசியம்!
அழகே அழகு
logo
Kalki Online
kalkionline.com