பாக்கியா மீண்டும் கோபியை திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்பதில் தெளிவாக இருக்கிறார். இதற்கு கோபி முழு துணையாக இருந்தாலும், ஈஸ்வரி திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முழு மூச்சில் இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் பல விறுவிறுப்பிற்கு நடுவில் முடிந்தது.
கோபிக்கு மறுபடியும் பாக்கியாவை கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று ஈஸ்வரி முடிவு எடுத்து விட்டார். அதனால் கோபியை கூப்பிட்டு உனக்கும் பாக்கியாவுக்கும் நான் மறுபடியும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் உனக்கு சம்மதமா என்று கேட்கிறார். கோபி வேண்டாம் என்று மறுப்பு சொல்லவும் இல்லை, ஓகே என சம்மதமும் தெரிவிக்கவில்லை.
எழில் மற்றும் செழியனிடம் எப்படியாவது பேசி சம்மதம் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்து, அவர்களிடமும் வாங்கிவிட்டார். இன்னும் பாக்கியாதான் பாக்கி என்றிருந்த சமயத்தில், பாக்கியா அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார். சொந்த பந்தங்கள், நண்பர்கள் என அனைவரும் வருகிறார்கள்.
கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடுகிறார். அனைவரும் கிப்ட் தருகிறார்கள். ஆனால், ஈஸ்வரியின் பரிசுதான் பாக்கியாவை கடுப்பாக்கியது. இனி பாக்கியாவும் கோபியும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழப் போகிறார்கள். மீண்டும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க போகிறேன் என்று கூறுகிறார்.
உடனே பாக்கியா கடும்கோபத்துடன் பேசிவிட்டு செல்கிறாள். நேற்று எபிசோடில் பாக்யா முன்பு போல் இல்லை. இரண்டு ரெஸ்டாரன்ட் திறந்த திமிரில் இருக்கிறாள். என்னை மதிப்பதே இல்லை என்று திட்டிக் கொண்டிருந்தார். ஆனால், கோபி அவள் தெளிவாகதான் இருக்கிறாள். இனி அதுபற்றி பேச வேண்டாம் என்று கூறுகிறான். அப்போதும் ஈஸ்வரி, உங்கள் இருவரையும் சேர்த்து வைப்பேன் என்று கோபமாக பேசி இருந்தார்.
கோபி, தன்னுடைய கிப்டை பாக்கியா பார்க்கவில்லை என்று ஃபீல் பண்ணிருந்தார். வீட்டிற்கு வந்த பாக்கியாவிடம் ஈஸ்வரி கோபப்பட்டார். இருவரும் மாறி மாறி கோபப்பட்டார்கள்.
இன்றைய எபிசோட்டில் கோபி, அம்மா சொன்னது தவறுதான். அம்மா பேசின வார்த்தைக்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறுகிறார். அதற்கு பாக்கியா, உங்களுக்கு உடம்பு சரியில்லாதததால்தான் அனுமதித்தேன். இப்போது சரியாகிவிட்டீர்கள் அல்லவா இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறிவிடுகிறார். அதற்கும் ஈஸ்வரி இடி விழுந்ததுபோல் கத்துகிறார்.