
சப்பாத்தி புரோட்டா பூரி என அனைத்திற்கும் பொருந்தும் வகையான குருமா வகைகள் வைப்பது என்றால் சவால்தான் இதோ உங்களுக்காக இந்த இரண்டு பாரம்பரிய குருமா வகைகள்.
நவரத்தின குருமா
தேவை:
காலிஃப்ளவர் - 100 கிராம்
பட்டாணி - 200 கிராம்
கேரட் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
(அன்னாசிப்பழம் பொடியாக வெட்டியது - 1/2 கப் ) ;தேவை என்றால்
திராட்சைப் பழம்- 100 கிராம்
முந்திரி பருப்பு - 10
எலுமிச்சம்பழம் - அரை மூடி அல்லது தேவைக்கு
தேங்காய் - ஒரு மூடி
பெரிய வெங்காயமும் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
வரமிளகாய் - 3
கொத்தமல்லிவிதைகள் - 3 டீஸ்பூன்
சோம்பு -1/2 டீஸ்பூன்
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 6
கிஸ்மிஸ் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு
கருவேப்பிலை கொத்தமல்லித்தழை- சிறிது
செய்முறை:
தேங்காய் சிறிதும் முந்திரி பருப்பையும் தனியாக அரைக்கவும். மீதமுள்ள தேங்காயை அரைத்து பால் எடுக்கவும். மற்ற மசாலா சாமான்களை தனியாக அரைக்கவும். காய்கறிகளை சுத்தம் செய்து பொடியாக ஒரே அளவாக வெட்டவும். குக்கரில் நெய் அல்லது எண்ணெய் விட்டு (விரும்பினால் 2 பட்டை கிராம்பு, ஏலக்காய் 2 சேர்க்கலாம்) முந்திரி பருப்பு , கிஸ்மிஸ் பழம், நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்கவும். அத்தோடு அரைத்த மசாலாவும் காய்கறிகளையும் போட்டு நன்கு வதக்கி தேங்காய், முந்திரி பருப்பு அரைத்ததை தேங்காய் பாலில் கலந்து உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வெந்ததும் திறந்து குழம்பு கெட்டியாகும் கொதிக்க விடவும். சற்று கெடாடியானதும் பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி எலுமிச்சம் பழம் சாறு சேர்த்து இறக்கவும். சிறிது ஆரியதும் வெட்டிய பழங்களை சேர்த்து பரிமாறலாம். இந்த குருமா அன்னாசிப்பழ மணத்துடன் காய்கறிகளின் சத்துடன் சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.
பச்சைப் பட்டாணி குருமா
தேவை:
பச்சைப் பட்டாணி - 1/4 கிலோ
தேங்காய் - 1
எண்ணெய் - தாளிப்பதற்கு
பட்டை கிராம்பு ஏலக்காய்- தலா 2
பெரிய வெங்காயம்- 1
எலுமிச்சம்பழம்- தேவைக்கு
வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் - 3 கொத்தமல்லி என்ற தனியா - 3டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
உப்பு – தேவைக்கு
செய்முறை:
தேங்காயில் பாதியையும் முந்திரி பருப்பையும் தனியாக அரைக்கவும். தனியா சோம்பு கசகசா மிளகாய் ஆகியவற்றை நைசாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை அரைத்த மசால் இரட்டை போட்டு வதக்கி மீறி தேங்காயில் பால் எடுத்து அரைத்த தேங்காய் முந்திரிப்பருப்புக் கலவையை சேர்த்துக் கலக்கி குக்கரில் ஊற்றி பட்டாணியும் சேர்த்து உப்பு கலந்து வேகவைக்கவும்.
பட்டாணி வெந்ததும் குக்கரை திறந்து குழம்பு கெட்டியாகும்வரை கொதிக்க விட்டு கெட்டி ஆனதும் நறுக்கிய மல்லித்தழை தூவி தேவையான எலுமிச்சம்பழம் சாறு சேர்த்துக்கிளறி இறக்கி பரிமாறலாம். காய்ந்த பட்டாணியில் செய்வதாக இருந்தால் வெந்நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து பிறகு குக்கரில் 20 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். பூரி, பரோட்டா, சப்பாத்திக்கு ஏற்ற காம்பினேஷன் இந்த பச்சைப்பட்டாணி குருமா.