பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு பெரிய ஆப்பு வைத்ததுடன், அவரே வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்லும்படி செய்திருக்கிறார் இனியா.
இனியா செல்வி மகனான ஆகாஷை காதலிக்கும் விஷயம் அறிந்து குடும்பமே ஸ்தம்பித்து போனது. செல்வியை வீட்டை விட்டு துறத்தியதுடன், செழியன் மற்றும் கோபி ஆகாஷை அடித்துவிட்டார்கள். ஆனால், இனியாவும் ஆகாஷும் இனி படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக கூறி வாக்களித்துவிட்டார்கள். ஆனால், அப்போதும் கோபியும் ஈஸ்வரியும் சும்மா இருக்கவில்லை. ஈஸ்வரி இனியாவுக்கு கல்யாணம் செய்து வைக்க முயற்சி எடுக்கிறார். அதேபோல், மாப்பிள்ளை வீட்டாரையும் அழைத்து வந்துவிட்டார். இங்குதான் இனியா ஒரு பெரிய வேலை செய்கிறார். அதாவது தனக்கு விருப்பமே இல்லாமல் நிச்சயதார்த்தம் செய்கிறார்கள் என்று போலீஸுக்கு போன் செய்து கூறிவிடுகிறார்.
சரியாக தட்டை மாற்றும்போது போலீஸ் வந்துவிடுகிறார்கள். போலீஸ் செம்மையாக பேசி நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டார்கள்.
இதனால் கோபமான ஈஸ்வரி ஒன்றும் செய்ய முடியாமல் போய்விடுகிறார். அடுத்ததாக வீட்டில் நடந்த விஷயத்தை ரெஸ்டாரண்டில் பாக்கியா யோசித்துப் பார்த்து பீல் பண்ணுகிறார். அப்பொழுது செல்வி இதற்கெல்லாம் காரணம் ஆகாஷ் தான் என்று சொல்லி மன்னிப்பு கேட்கிறார். அதற்கு பாக்கியா, உன் பையன் மீது மட்டும் தவறில்லை இரண்டு பேரின் மீதும்தான் தவறு இருக்கிறது. நம் பேச்சைக் கேட்டு இப்போது புரிந்து இருப்பதே பெரிய விஷயம் என்று கூறுகிறார்.
கோபி வீட்டில் உள்ள அனைவரையும் வரவழைத்து நான் இவ்வளவு நாள் இருந்ததற்கு காரணம், சில விஷயங்களை முடிக்க வேண்டும் என்றுதான்.
ஆனால், அதற்குள் இனியா பிரச்னை வந்துவிட்டது. அதுவும் நான் நினைத்ததுபோல் நடக்கவில்லை. ஆகையால், நான் வீட்டை விட்டு செல்வதுதான் சரி என்று கூறுகிறார். இதற்கு ஈஸ்வரி தவிர வேறு யாருமே எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. போக வேண்டுமென்றால் செல்லுங்கள் என்பதுபோல நிற்கிறார்கள்.
அப்போதும் இனியா எழிலை கூட்டிக்கொண்டு ஆகாஷை பார்த்து எக்ஸாமுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று இனியா செல்வி வீட்டுக்கு போகிறார். அப்படி ஆகாஷிடம் பேசிவிட்டு வெளியே வரும் பொழுது ஆகாஷ் அப்பா பார்த்துவிட்டு நேரடியாக பாக்யா வீட்டிற்கு வந்து ஈஸ்வரி மற்றும் கோபியிடம் சண்டை போடுகிறார்.
இதனால், தனது முடிவை மாற்றி வீட்டிலேயே இருக்கப் போகிறார் கோபி.