விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இனியா சொன்னபடி நன்றாகப் படித்து சாதித்துக் காட்டியுள்ளார். ஆனால், ஆகாஷ் யுபிஎஸ்சி தேர்வில் ஃபெயில் ஆகி விட்டார்.
இனியா செல்வி மகனான ஆகாஷை காதலிக்கும் விஷயம் அறிந்து குடும்பமே ஸ்தம்பித்து போனது. செல்வியை வீட்டை விட்டு துறத்தியதுடன், செழியன் மற்றும் கோபி ஆகாஷை அடித்துவிட்டார்கள். ஆனால், இனியாவும் ஆகாஷும் இனி படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக கூறி வாக்களித்துவிட்டார்கள்.
இதற்கிடையே ஈஸ்வரியும் கோபியும் இனியாவுக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், போலீஸ் வந்து அதைத் தடுத்துவிட்டது. இதனால், ஈஸ்வரி மிகவும் கோபப்பட்டார்.
பின் யுபிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. அதில் ஆகாஷ் தேர்வு எழுதப் போகும்போது எழில், இனியாவை அழைத்து ஆகாஷ் வீட்டிற்கு சென்றார். இனியா ஆகாஷுக்கு வாழ்த்து தெரிவித்து திரும்பும்போது ஆகாஷ் அப்பா பார்த்துவிடுகிறார். உடனே அவர் கோபி வீட்டுக்கு சென்று சண்டைப் போட்டுவிட்டு செல்கிறார்.
உடனே யாரை கேட்டு இனியா அங்கு போனால், என்று வழக்கம்போல், ஈஸ்வரியும், கோபியும் கேட்க… நான்தான் அழைத்துப் போனேன் என்று எழில் வந்து நிற்கிறான். பாக்கியா இதில் என்ன இருக்கிறது என்று எழில் மற்றும் இனியாவுக்கு சப்போர்ட் செய்கிறார். உடனே ஈஸ்வரி கோபத்தில் கத்தி, நான் வீட்டைவிட்டு போகிறேன் என்று பேச்சுக்கு கூறினார்.
ஆனால், பாக்கியா.. போங்க அத்த…. அப்படியே அந்த மாத்திரை பாக்ஸ மறந்துறாதீங்க... என்று கூறவும், ஈஸ்வரி ஷாக் ஆகி நின்றுவிட்டார்.
பின் கோபியும் ஈஸ்வரியும் வீட்டை விட்டு வெளியே போகிறார்கள்.
சில மாதங்களுக்கு பிறகு இனியாவிற்கு ரிப்போர்ட்டர் வேலை கிடைக்கிறது. பின் இந்த விஷயத்தை தன்னுடைய அப்பா, பாட்டியிடம் சொல்ல இனியா வீட்டிற்கு போனார். கோபி ரொம்ப சந்தோஷப்பட்டார்.
பின் இன்றைய எபிசோடில், இனியா கிளம்பி தனது முதல் நாள் வேலைக்கு செல்கிறார். பாக்கியா சந்தோஷமாக வாழ்த்து சொல்லி அனுப்பி வைக்கிறார். பின் பாக்கியா ஈஸ்வரியிடம் சென்று வீட்டுக்கு வருமாறு கூறுகிறார். நான் அவனை விட்டு வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். எதுவுமே பேச முடியவில்லை பாக்கியா கிளம்பி வந்து விடுகிறார். அதற்கு பின் டிவியில் இனியா செய்தி பார்த்து எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள்.