பலாப்பழம் சாப்பிடக் கூடாத 5 பேர் யார் என்று தெரியுமா?

பலாப்பழம்
பலாப்பழம்
Published on

முக்கனிகளில் ஒன்று பாலாப்பழம். பலாப்பழத்தை யாரும் வேண்டாம் என்று கூற மாட்டார்கள். பலாப்பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ‘இந்தப் பழத்தை எல்லோரும் சாப்பிடலாமா?’ என்று கேட்டால், கூடாது என்றுதான் கூற வேண்டும். சில வகையான உடல்நலப் பிரச்னைகள் உள்ள 5 பேர் இந்தப் பலாப் பழத்தை சாப்பிடவே கூடாது.

‘யார் யார் அந்த 5 நபர்கள்? அந்தப் பட்டியலில் நாம் இருக்கிறோமா’ என்றுதானே  யோசிக்கிறீர்கள். யார் யார் பலாப்பழம் சாப்பிடக்கூடாது என்பதைக் குறித்து இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோம்.

1. சரும அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்றி பலாப்பழம் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் பலாப்பழம் அழற்சி பிரச்னையை அதிகப்படுத்தும்.

2. இரத்தம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இவர்கள் பாலாப்பழம் சாப்பிடுவதால் இவர்களின் இரத்தப் பிரச்னை இன்னும் அதிகரிக்கலாம்.

3. அறுவை சிகிச்சை செய்தவர்கள் பலாப்பழத்தை தொடவே கூடாது. அறுவை சிகிச்சை முடிந்து வந்தவுடன் பலாப்பழம் சாப்பிட்டால் காயம் அதிகமாகி விடும். காயம் குணமாகிய பின்னர் எடுத்துக் கொள்ளலாம்.

4. கர்ப்பமாக இருப்பவர்கள் மறந்தும் கூட பலாப்பழத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால், குழந்தையின் வளர்ச்சியில் அது சில வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
கால் மேல் கால் போட்டு அமர்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா?
பலாப்பழம்

5. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பலாப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தப் பழம், குழந்தையின் வயிற்றில் சில வேண்டாத கோளாறுகளை ஏற்படுத்தலாம்.

‘மேற்கண்ட பட்டியலில் நாம் இல்லை’ என்று சொல்பவர்கள் சந்தோஷமாக பலாப்பழம் சாப்பிடுங்கள். ‘இந்தப் பட்டியலில் நாம் இருக்கிறோம்’ என்று வருத்தப்படுபவர்கள் வருத்தத்தை விடுங்கள். நம் உடல் நலம்தான் முக்கியம். மருத்துவரிடம் செல்லாமல் நாம் இருக்க வேண்டும் என்றால் சில சின்னச் சின்ன தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று மனதை தேற்றிக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com