விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவிற்கு எதிராக முழு குடும்பமும் திரும்பிவிட்டது. இதனால், நொந்துப்போன இனியா நான் வீட்டைவிட்டு வெளியே போகிறேன் என்று கூறுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில், விறுவிறுப்பான கதைக்களம் ஒன்று நகர்கிறது. அதாவது இனியா ஆகாஷை காதலிக்கும் விஷயம் கோபிக்கு தெரிந்து, அவர் வீட்டுக்கு வந்து அனைவரிடம் கூறி வீட்டை இரண்டாக்கிவிட்டார். கடந்த சில நாட்களாகவே இதுதான் நகரந்து வருகிறது.
கோபி செழியன் இருவரும் செல்வியை வேலையை விட்டு நிறுத்திவிட்டனர். ஈஸ்வரி பாக்கியாவை வேலைக்குப் போக கூடாது என்று கூறிவிடுகிறார்.
ஆனால், பாக்கியா இதற்கு உங்கள் மகனும்தான் பொருப்பேற்றுக்கொள்ள வேண்டும். ஆகையால், நான் வேலைக்குப் போவேன் என்று கடுமையாக கூறிவிடுகிறார். இதனால் ஈஸ்வரி ஷாக் ஆகிவிடுகிறார்.
பாக்கியா ரெஸ்டாரன்ட் போனபோது, அங்கு செல்வி இல்லாததை கண்டு, வீட்டுக்கு செல்கிறார். அங்கு ஆகாஷுக்கு சில அறிவுரைகள் வழங்கியதுடன், செல்வியை வேலைக்கு வருமாறு கூறுகிறார். முதலில் தடுமாறிய செல்வி பின் ஒப்புக்கொண்டார்.
அன்று இரவு ஆகாஷ் இனியாவுக்கு ஒரு மெசேஜ் செய்கிறார். அப்போது போன் கோபியிடம் இருக்கிறது. இதனால், கோபி அந்த மெசேஜைப் பார்த்துவிட்டு, செழியனுடன் செல்வி வீட்டுக்கே சென்று ஆகாஷை அடித்துவிடுகிறார். செழியன் மிகவும் கோபப்பட்டு தலையில் அடித்துவிடுகிறார். அருகில் உள்ளவர்கள் ஆகாஷுக்கு சப்போர்ட் செய்ததால், செழியனும் கோபியும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். பின் ஆகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது அறிந்த விரைந்த பாக்கியா செல்வி மிகவும் வருத்தப்பட்டனர். அத்துடன் பாக்கியா கோபமாக வீட்டுக்கு வந்து சண்டையிட்டார். கோபத்தில் செழியனை அடிக்கப்போனார். அப்போவும் செழியன் “இனியாவிடம் அவன் வந்தால், வெட்டிப் போட்டுவிடுவேன்" என்று கூற பாக்கியா செழியனை அடித்துவிட்டாள். இதனால், ஜெனி பாக்கியாவை இதில் என்ன தப்பு இருக்கிறது என்று பாக்கியாவிற்கு எதிராக திரும்பிவிட்டார். எழிலை தவிர அனைவரும் பாக்கியாவிற்கு எதிராக திரும்பிவிட்டனர்.
அதேசமயம் எழில் மருத்துவமனைக்கு சென்று ஆகாஷைப் பார்த்துவிட்டு வந்தார், அப்போது வீட்டிலுள்ளவர்கள் இனி யாரும் அவனைப் பார்க்க போகக்கூடாது என்று சொல்ல,
இனியா இது எல்லாம் என்னால்தான், நான் இனி அவனிடம் பேசமாட்டேன். அப்போதும் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், நான் வீட்டைவிட்டு போகிறேன் என்று கூறிவிடுகிறார்.