
பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்த சீரியல் பிரபலமானதற்கு அதன் கதாநாயகன் சதீஷ் தான் காரணம். கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சதீஷ் இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு தேவையா கோபி என்ற மீம்ஸ் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பேமஸானார். என்னதான் பல வருடங்களாக சீரியலில் நடித்து வந்தாலும், இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது இந்த சீரியல் தான்.
இந்த சீரியலில் இவரை தவிர வேறு யாரும் நடிக்கவே முடியாது என்ற அளவிற்கு நல்ல பெயரை எடுத்துள்ளார். இந்த சீரியல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு கோபி அவருடைய நண்பியான ராதிகாவை மறுமணம் செய்தார். ஆனால் அந்த வாழ்க்கையும் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. தற்போது ராதிகாவையும் விவாகரத்து செய்து விட்டு அவருடைய அம்மாவுடன் பாக்கியா வீட்டில் இருந்து வருகிறார். சீரியல் முடிந்து விடும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தற்போது இனியாவுக்கு திருமணம் முடிந்து ரெஸ்டாரண்ட் பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது. இப்படி சீரியல் ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது, கோபி எனப்படும் சதிஷ் அவருடைய சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், தினமும் ஒரு பதிவை பகிரும் கோபி, அவருடைய அக்கா மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவரின் முயற்சிக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், இவர் தான் உங்கள் மருமகளா என கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த சிறுமி வேறு யாரும் இல்லை. ராட்சசன் படத்தில் சைகோ கொலைகாரனை காட்டி கொடுத்த சிறுமி தான் இவர். இவரை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் இவர் உங்களது உறவினரா என கேட்டு வருகின்றனர்.