மனமுடைந்த ஈஸ்வரிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பாக்கியா...!

Baakiyalakshmi
Baakiyalakshmi

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பாக்கியலட்சுமி சீரியலில் மனமுடைந்து கிடந்த ஈஸ்வரியை பாக்கியா தனியாக அழைத்து சென்று சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார்.

1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து, தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். ஒரு பக்கம் சந்தேகத்தின் உச்சியில் இருக்கும் ஜெனியிடம் செழியன் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த வார எபிசோட்டில் ராதிகா தவறி விழுந்ததில் கரு கலைந்து விட்டது.

இதனால் கொந்தளித்த கோபி, ஈஸ்வரி தான் தள்ளிவிட்டார் என நினைத்து தாயிடம் சண்டைக்கு செல்கிறார். இதனால் கதை விறுவிறுப்பாகியுள்ளது. மேலும் தாயை வீட்டை விட்டு வெளியேற்றியதால் ஈஸ்வரி நிலைகுலைந்துள்ளார். வீட்டில் தினமும் அழுது கொண்டிருந்த ஈஸ்வரியை சமாதானம் செய்து பாக்கியா வெளியூருக்கு காரில் அழைத்து செல்கிறார். உடன் இனியாவும், தாத்தாவும் செல்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
திரையில் கல்லா கட்டும் மகாராஜா... ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
Baakiyalakshmi

அப்போது ரூமில் இருந்த ஈஸ்வரி தனது நண்பி சாவித்திரி குறித்த அனுபவங்களை பகிருகிறார். உடனடியாக மாமியாரை சந்தோஷப்படுத்த பாக்கியா சாவித்திரியை நேரில் அழைத்து வருகிறார். இதனால் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்ற ஈஸ்வரி பழைய கதைகளை பேசி சந்தோஷமாக இருக்கிறார். இது தொடர்பான புரோமோ வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com