ராதிகா பேச்சை கேட்டு அம்மாவை வீட்டை விட்டு துரத்திய கோபி... வீண் பழியோடு செல்லும் ஈஸ்வரி... பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!

பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வார புரோமோவில், ராதிகாவின் பேச்சை நம்பி ஈஸ்வரி தான் குழந்தை கொன்றார் என நினைத்து கோபி அவரை வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார்.

1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து, தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். ஒரு பக்கம் சந்தேகத்தின் உச்சியில் இருக்கும் ஜெனியிடம் செழியன் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென தாத்தாவாக இருக்கும் கோபி தனது 2வது மனைவி ராதிகா மூலம் மீண்டும் அப்பாவாகி உள்ளார்.

இந்த விஷயம் ஒட்டுமொத்த வீட்டிற்கும் தெரிய வர, ‘இது எனது வீடு. அதனால் வீட்டை விட்டு கிளம்புங்கள்’ என்று பாக்கியா கோபியிடம் கூறினார். வீட்டை விட்டுப் போவதை தாங்கிகொள்ள முடியாத கோபி, பாக்கியாவை பழி வாங்குவதற்காக தனது தாய் ஈஸ்வரியையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

ராதிகா வீட்டிற்கு சென்ற ஈஸ்வரியால் தினமும் சண்டை, சச்சரவுகள்தான். இதனால் வீட்டில் ஒழுங்காக சாப்பிடாத ஈஸ்வரி அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போகிறார். ஒரு கட்டத்தில் சாப்பிடாமல் ஈஸ்வரி மயக்கம் போட, அவர் குணமாகி மீண்டும் ராதிகா வீட்டிற்கே வருகிறார். இனிமேல் ஈஸ்வரி இங்கு வரமாட்டார் என்று நினைத்து கொண்டிருந்த கமலா, ராதிகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் நம்பி வந்த ஈஸ்வரியை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்த கோபி, மூன்று நேரமும் தாயை பார்த்துப் பார்த்து கவனித்துக் கொள்கிறார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: லாந்தர் - வெளிச்சம் குறைவு!
பாக்கியலட்சுமி

ராதிகாவிற்கும், ஈஸ்வரிக்கும் ஏற்கெனவே சண்டை உச்சக்கட்டத்தில் இருக்க, ராதிகா கீழே தவறி விழுந்தார். இதனால் கருவும் கலைந்துவிட, அதற்கு ஈஸ்வரி தான் காரணம் என கூறுகிறார்கள். கமலா, ராதிகா பேச்சை கேட்ட கோபி தனது தாய் தான் செய்திருப்பார் என நினைத்து கோபமடைகிறார். அம்மா செய்திருக்க மாட்டார் என்றெல்லாம் சப்போர்ட் செய்த கோபியையும் ராதிகா மாற்றிவிடுகிறார். அந்த வகையில் இன்று வெளியான புரோமோவில், வீட்டிற்கு வந்த கமலா உனக்கு வெட்கமா இல்லையா இன்னும் இங்கேயே இருக்க குழந்தைய கொன்னுட்டு என்று கேட்க, அதனால் மனமுடைந்த ஈஸ்வரி கோபியிடம் நான் செய்ய மாட்டேன் என சொல்லும் என கதறி அழுகிறார். ஆனால் ராதிகா பக்கம் சாய்ந்த கோபி, ஏன் இப்படி செய்தீர்கள் வீட்டை விட்டு கிளம்புங்கள் என சொல்ல, கண்ணீருடன் ஈஸ்வரியும் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இனி அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com