'உங்க அப்பா அப்பாவாக போறாரு' குடும்பத்தாரிடம் உண்மையை சொன்ன பாக்கியா... அடுத்து என்ன நடக்கும்?

Baakiyalakshmi
Baakiyalakshmi

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்று கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். ஒரு பக்கம் சந்தேகத்தின் உச்சியில் இருக்கும் ஜெனியிடம் செழியன் மாட்டி தவித்து கொண்டிருக்கிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென தாத்தாவாக இருக்கும் கோபி தனது 2வது மனைவி ராதிகா மூலம் மீண்டும் அப்பாவாகியுள்ளார்.

இதை அறிந்து கொண்ட அவர்கள் அதிர்ச்சியில் வீட்டில் எப்படி சொல்வது என புலம்பி வருகின்றனர். ஆனால் ராதிகாவோ தனது வீட்டில் சொல்லிவிட்டு, கோபியையும் அவரது வீட்டில் சொல்ல சொல்லி வற்புறுத்துகிறார். மேலும் ராதிகாவே பாக்கியாவிடமும் இந்த விஷயத்தை கூறியுள்ளார். தொடர்ந்து கோபியும் தனது தாயை அழைத்து சென்று ஈஸ்வரியிடம் கூறியுள்ளார். இதை கேட்டு கொந்தளித்த ஈஸ்வரி ராதிகாவை நேரில் சந்தித்து குழந்தையை கலைக்க சொல்லி வற்புறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த ராதிகா, ஈஸ்வரியை திட்டி அனுப்பியதுடன் மற்றவர்களிடமும் கர்ப்ப விஷயத்தை கூறும் படி கோபியை மிரட்டுகிறார். ஆனால் கோபியோ தயங்கியப்டி என்ன செய்வதென்று தெரியாமல் திணறுகிறார். தொடர்ந்து இன்றைய எபிசோட்டிலும் ராதிகா கோபியை கூற சொல்லி வற்புறுத்தவே, ஈஸ்வரி அதெல்லாம் முடியாது என்று ராதிகாவை திட்டுகிறார்.

இதையும் படியுங்கள்:
சிறு பட்ஜெட் படங்களைக் காப்பாற்றுமா ஓடிடி பிளஸ்?
Baakiyalakshmi

இதனை பார்த்த கோபியின் தந்தை, அங்கு என்ன நடக்கிறது என கேட்க, ராதிகாவும் கோபி விஷயத்தை கூறுவார் என்று சொல்கிறார். மேலும், இனியாவை அழைத்து அனைவரையும் ஹாலுக்கு வரசொல்லி கோபியை கர்ப்ப விஷயத்தை சொல்ல சொல்கிறார். ஆனால் கோபியும், ஈஸ்வரியும் மாறி மாறி ஒன்றுமில்லை என்று சொல்ல கடுப்பான பாக்கியா, எழுந்து வந்து உங்க அப்பா மீண்டும் அப்பாவாக போகிறார். அவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறிவிட்டார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். இதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com