செழியனை மாப்பிள்ளை பார்க்க வந்த பெண் வீட்டார்... அதிர்ச்சியில் பாக்கியா செய்த செயல்!

Baakiyalakshmi
Baakiyalakshmi

நேற்றைய எபிசோட்டில் ஈஸ்வரி தரகரை அழைத்து பேசிய நிலையில் இன்றைய எபிசோட்டில் பெண் வீட்டார் செழியனை மாப்பிள்ளை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளனர்.

சீரியல்களுக்கு ஊர்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர்.

அப்படி ரசிகர்களின் பேவரைட் ஆன ஒரு சீரியல் தான் பாக்கியலட்சுமி. 1000 எபிசோட்களை கடந்து சாதனை படைத்த பாக்கியலட்சுமி சீரியல் வாரம் வாரம் டிஆர்பியில் டாப் 3 இடங்களை பிடித்து விடும். ஆனால், தற்போது டிஆர்பியில் பின் தங்கிய இடத்திற்கு சென்றதால், ஏதேதோ செய்ய முயற்சிக்கின்றனர்.

ஒரு பக்கம் எழில் வாழ்க்கை சீர்குலைந்து போக, இன்னொரு பக்கம் செழியன் வாழ்க்கை விவாகரத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது. இவர்களின் விவாகரத்து பிரச்சனையே முடிவடையாத நிலையில், ஜெனியின் தந்தை அவருக்கு புது மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விவாகரத்து கிடைத்தவுடன் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கோபியிடம் கூறுகிறார்.

இதை கேட்டு கொந்தளித்த கோபி, இதை அனைவரிடமும் சொல்ல பிரச்சனை முற்றி செழியனுக்கும் பெண் பார்க்கும் படலத்தில் அனைவரும் களமிறங்கியுள்ளனர். அதன் படி இன்றைய எபிசோட்டில் செழியனை மாப்பிள்ளை பார்க்க வந்த பெண் வீட்டார், செழியனிடம் பெண் போட்டோவை காட்டுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த செழியன் போட்டோவை பார்க்காமல் மாடிக்கு செல்கிறார். ஏன் மாப்பிள்ளைக்கு இஷ்டமில்லையா என பெண் வீட்டார் கேட்க, கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும் என ஈஸ்வரி தெரிவிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
பிக்பாஸ் ரசிகர்களுக்கு வரப்போகும் ட்ரீட்... வைரலாகும் புரோமோ!
Baakiyalakshmi

அப்போது எண்ட்ரி கொடுத்த பாக்கியா, பெண் வீட்டாரை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரும் பெண்ணின் போட்டோவை பார்க்காமல் நேரடியாக செழியன் எங்கே கேட்டு மாடிக்கு செல்கிறார். தொடர்ந்து செழியனை கீழே அழைத்து வந்து திருமணத்தில் இஷ்டமில்லை என கூற சொல்கிறார். ஆனால் செழியனோ அமைதியாக இருக்க, கடுப்பான பாக்கியா, அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு திருமணத்தில் விருப்பமில்லை என்பதை கூறுகிறார். மேலும், என் மகனுக்கு ஜெனியுடன் வாழவே விருப்பம், அதற்கான முயற்சியில் இருக்கிறோம். இன்னும் விவாகரத்து வாங்கவில்லை என தெரிவிக்கிறார். இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சியடைகின்றனர். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com