பிக்பாஸ் ரசிகர்களுக்கு வரப்போகும் ட்ரீட்... வைரலாகும் புரோமோ!

Bigg Boss 7 Kondattam
Bigg Boss 7 Kondattam

பிக்பாஸ் 7 கொண்டாட்டத்திற்கான புரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பிக்பாஸ் சீசனுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இதுவரை 6 சீசன்கள் கடந்த நிலையில் 2023ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி 7வது சீசன் தொடங்கியது. பல பல டவிஸ்ட்களை அடுக்கி தள்ளிய இந்த சீசனில் கடைசி வரை அந்த ட்விஸ்ட் நீடித்தது. 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டு அசத்தலாக விளையாடிய நிலையில் தினேஷ், மாயா, அர்ச்சனா, மணி, விஷ்ணு ஆகியோர் டாப் 5 போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் விஜய் அசத்தலாக விளையாடி டாப் 6இல் இருந்தார். எந்த சீசனுக்கும் இல்லாத வரவேற்பு இந்த சீசனுக்கு இருந்ததற்கு முக்கிய காரணம் பிரதீப் வெளியேற்றப்பட்டது தான். ரெட் கார்ட் கொடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். சீசன் முடிந்து இத்தனை மாதங்கள் ஆகியும் இன்னும் இணையத்தில் சண்டைகள் தொடர்ந்து வருகிறது. ஆனால் போட்டியாளர்களோ அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து முன்னேறி வருகின்றனர். இந்த சீசனின் டைட்டில் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். இவரது வெற்றியை பிரதீப் ரசிகர்கள் மிகவும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

புல்லி கேங் என்று சொல்லப்படும் மாயா டீம் யாரும் வெற்றி பெற கூடாது என்பதே பலருடைய கனவாக இருந்தது. இவர்களின் சதி வேலையால் தான் பிரதீப் வெளியேறிவிட்டதாகவும் குமுறி வருகின்றனர். தற்போது இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அனைவரும் கேட்டு கொண்டிருந்த நிலையில், தற்போது அனைவரும் மீண்டும் ஒன்று கூடியுள்ளனர். அதாவது பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
சீரியல் நடிகை ஸ்ரீதேவிக்கு பிரம்மாண்ட வளைகாப்பு: வைரலாகும் போட்டோஸ், வீடியோஸ்!
Bigg Boss 7 Kondattam

சமீபத்தில் கூட இதன் ஷூட்டிங் நடைபெற்ற போது விசித்ரா வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால் அது என்ன என்பது பலருக்கும் தெரியவில்லை. தற்போது இதற்கான அதிகாரப்பூர்வ புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. அதில் அனைத்து போட்டியாளர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவர்களது பேவரைட் போட்டியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி அன்பை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com