முட்டி கொண்ட கமலா - ஈஸ்வரி... ராதிகா வீட்டில் அடுத்து என்ன நடக்கும்? பாக்கியலட்சுமி அப்டேட்!

Baakiyalakshmi
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா வீட்டிற்கு சென்ற ஈஸ்வரி, கமலாவுடன் போடும் சண்டை காண்போரை விறுவிறுப்பாக செய்கிறது.

1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்று கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். ஒரு பக்கம் சந்தேகத்தின் உச்சியில் இருக்கும் ஜெனியிடம் செழியன் மாட்டி தவித்து கொண்டிருக்கிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென தாத்தாவாக இருக்கும் கோபி தனது 2வது மனைவி ராதிகா மூலம் மீண்டும் அப்பாவாகியுள்ளார்.

இதை அறிந்து கொண்ட அவர்கள் அதிர்ச்சியில் வீட்டில் எப்படி சொல்வது என புலம்பி வருகின்றனர். ஆனால் ராதிகாவோ தனது வீட்டில் சொல்லிவிட்டு, கோபியையும் அவரது வீட்டில் சொல்ல சொல்லி வற்புறுத்துகிறார். மேலும் ராதிகாவே பாக்கியாவிடமும் இந்த விஷயத்தை கூறியுள்ளார். தொடர்ந்து கோபியும் தனது தாயை அழைத்து சென்று ஈஸ்வரியிடம் கூறியுள்ளார். இதை கேட்டு கொந்தளித்த ஈஸ்வரி ராதிகாவை நேரில் சந்தித்து குழந்தையை கலைக்க சொல்லி வற்புறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த ராதிகா, ஈஸ்வரியை திட்டி அனுப்பியதுடன் மற்றவர்களிடமும் கர்ப்ப விஷயத்தை கூறும் படி கோபியை மிரட்டுகிறார். தொடர்ந்து பாக்கியலட்சுமி உண்மையை உடைக்க, இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறுகின்றனர். மேலும் கோபியை வீட்டை விட்டு போக சொல்லி வற்புறுத்துகின்றனர்.

இதையும் படியுங்கள்:
விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. மாஸான அப்டேட்டால் ரசிகர்கள் குஷி!
Baakiyalakshmi

தொடர்ந்து நேற்று முன் தின எபிசோட்டில், கோபி எனது அம்மா கூறினால் மட்டுமே தான் நான் வீட்டை விட்டு செல்வேன் என கூற, கடுப்பான ஈஸ்வரி போய் தொல என்று சொல்லிவிட்டார். இதனால் மனமுடைந்த கோபி புலம்பி கொண்டிருக்கிறார். ராதிகாவோ வீட்டில் இருந்து புறப்பட கிளம்புகிறார். இதையடுத்து இன்றைய எபிசோட்டில் செண்டிமெண்ட் பிட்டை போட்ட கோபி தாயை உருக வைத்து தன்னுடன் வரும் படி கேட்கிறார். நான் செத்து போய்விடுவேன் என கூறி ஈஸ்வரியை உடன் அழைத்து செல்ல அழைக்கிறார். அவரும் மகனின் நீலிகண்ணீரை கண்டு உருகி வருகிறேன் என ஒத்து கொண்டு விட்டார். இதற்கு அனைவரும் ஒத்து போக மகனுடன் பேக்கும் கையுமாக கிளம்பிவிட்டார் ஈஸ்வரி.

இன்றைய எபிசோட்டில் ராதிகா வீட்டிற்கு சென்ற ஈஸ்வரி, தன் வீடு போல் நினைத்து தண்ணீர் வேண்டும், பால் வேண்டும் என ஆர்டர் போடுகிறார். இதனால் கடுப்பான கமலா நாங்கள் ஒன்னும் வேலைக்காரி இல்லை. நீ வந்ததே எனக்கு பிடிக்க வில்லை என கூற, உனக்கு பிடிக்கலனா நான் இங்கதான் இருப்பேன் என கூறிவிட்டு செல்கிறார். மேலும் பாலை கீழே கொட்டிவிட்டு நீயே தொட என ஆர்டர் போட்டு செல்கிறார். இதனால் ராதிகா வீட்டில் சண்டை சலசலப்பு அதிகரித்து விட்டது. மறுபக்கம் பாக்கியா வீட்டிலோ நன்றாக சமைத்து சாப்பிடுகிறார்கள். இனி போக போகதான் தெரியும் ராதிகா வீட்டில் என்ன நடக்கும் என்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com