
விஜய் டிவியில் 1000 எபிசோட்களை கடந்து ஓடி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது மீண்டும் விறுவிறுப்பாகியுள்ளது. குடும்ப பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த சீரியல் பெண்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது இனியாவின் புலம்பலையும், ராதிகாவின் வெறுப்பையும் பெற்ற கோபிநாத் மனமுடைந்து காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வலி தாங்கமுடியாமல் கோபி அடித்த போனை ராதிகாவும், அவரது அம்மாவும் உதாசிணப்படுத்தவே, பாக்கியலட்சுமி போனை அட்டண்ட் செய்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு ஓடோடி கோபிநாத்தை காப்பாற்றினார். இந்த சம்பவம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆன கோபிநாத்திற்கு பைபாஸ் சர்ஜரி செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள்.
சம்பவ இடத்திற்கு வந்த ஈஸ்வரி ராதிகாவிடம் கூறக்கூடாது என சண்டையிட்டு மனைவி என்ற பெயரில் பாக்கியலட்சுமியை கையெழுத்திட வைத்தார். தொடர்ந்து கோபிநாத் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து மருத்துவமனை வந்த ராதிகாவை ஈஸ்வரி வறுத்தெடுத்து விட்டார். மேலும் செழியனும் புரிந்து கொள்ளாமல் நீங்கள் புறப்படுங்கள் நாங்கள் எங்கள் அப்பாவை பார்த்து கொள்கிறோம் என கூறுகிறார். மனமுடைந்த ராதிகா ஓரமாக நின்று அழுக, ஈரமுள்ள பாக்கியலட்சுமி ஈஸ்வரியை கடைக்கு அனுப்பிவிட்டு ஒருமுறை கோபியை பார்க்க ராதிகாவிற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.
இன்றைய எபிசோட்டில் ஆபரேஷன் முடிந்து நார்மல் வார்டுக்கு வந்த கோபிநாத்தை பார்க்க மீண்டும் ராதிகா மருத்துவமனைக்கு வந்தார். அப்போதும் ஈஸ்வரி ராதிகாவை அனுமதிக்காமல் சண்டையிட்டார். இனியா, செழியன் என ஒட்டுமொத்த குடும்பமும் ராதிகாவிற்கு எதிராக நின்றனர். ஆனால் பாக்கியாவும், எழிலும் ஈஸ்வரியை சாப்பிட செல்லுங்கள் என்று கூறி அவரை அனுப்பிவிட்டு ராதிகாவை பார்க்க அனுமதித்தனர்.
கவலையோடு கோபியை பார்க்க சென்ற ராதிகாவிற்கு மேலும் ஒரு ஷாக் காத்திருந்தது. உள்ளே சென்ற ராதிகா கோபியின் கையை பிடித்து கோபி என அழைத்தார். ஆனால் எழுந்து பார்த்த கோபி, ராதிகாவை பாக்கியா என நினைத்து பாக்கியா ரொம்ப நன்றி, நான் அவ்வளவு கொடுமை செய்தும், தீங்கு செய்தும் நீ என்னை காப்பாற்றி விட்டாய், நீ வரவில்லை என்றால் நான் செத்து போயிருப்பேன் என கூறி நன்றி கூறுகிறார். உடனே உள்ளே வந்த ஈஸ்வரி, கோபி ராதிகா கையை பிடித்திருப்பதை பார்த்து ஆத்திரமடைந்து அவரை கையை பிடித்து இழுத்து வந்து வெளியே விட்டார். அதோடு இல்லாமல் உன்னை பார்த்தால் கோபிக்கு ஏதாவது ஆகிவிடும் என கூறி திட்டுகிறார். இதனால் மனமுடைந்த ராதிகா அழுத படி கீழே வந்தார். அப்போது கார்க்காக காத்திருந்த பாக்கியாவிடம் பேசவேண்டும் என கூறுகிறார். அப்போது நான் இந்த திருமணத்தை செய்திருக்கவே கூடாது. நன்றி பாக்கியா அவரை காப்பாற்றியதற்கு என கூறுகிறார். மேலும், எல்லா விஷயங்களிலும் சரியான முடிவு எடுக்கும் நான், கோபி விஷயத்தில் தப்பு பண்ணிட்டேன் டீச்சர் என கூறுகிறார்.
இருவரும் தோழியாக இருந்த சமயத்தில் ராதிகா, பாக்கியாவை டீச்சர் என்று தான் அழைப்பார். அதே போன்று தற்போது அழைத்ததால் இருவரின் நட்பும் அதில் வெளி வந்தது. அதோடு இல்லாமல் பாக்கியா தோளில் சாய்ந்து ராதிகா கதறி அழுக, பாக்கியா அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். மேலும் இந்த கோபிநாத்தால் யாருக்குமே நிம்மதி இல்லை என கூற அதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. இனி வரும் நாட்களில் கோபி அவர் வீட்டிற்கு செல்வாரா, மீண்டும் பாக்கியா வீட்டிற்கு செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.