ஜெனி திருமணம்... அதிர்ச்சியடைந்த செழியன்... பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்!

Baakiyalakshmi
Baakiyalakshmi

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஜெனியின் திருமண செய்தியை கேட்டு கொந்தளித்த செழியன் மாமனாருடன் வாக்குவாதத்திற்கு செல்கிறார்.

சீரியல்களுக்கு ஊர்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர்.

அப்படி ரசிகர்களின் பேவரைட் ஆன ஒரு சீரியல் தான் பாக்கியலட்சுமி. 1000 எபிசோட்களை கடந்து சாதனை படைத்த பாக்கியலட்சுமி சீரியல் வாரம் வாரம் டிஆர்பியில் டாப் 3 இடங்களை பிடித்து விடும். ஆனால், தற்போது டிஆர்பியில் பின் தங்கிய இடத்திற்கு சென்றதால், ஏதேதோ செய்ய முயற்சிக்கின்றனர்.

ஒரு பக்கம் எழில் வாழ்க்கை சீர்குலைந்து போக, இன்னொரு பக்கம் செழியன் வாழ்க்கை விவாகரத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது. இவர்களின் விவாகரத்து பிரச்சனையே முடிவடையாத நிலையில், ஜெனியின் தந்தை அவருக்கு புது மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விவாகரத்து கிடைத்தவுடன் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கோபியிடம் கூறுகிறார்.

இதையும் படியுங்கள்:
விஜய் மகன் கதைக்கு நோ சொன்ன சிவகார்த்திகேயன்... ஹீரோ இல்லாமல் திணறும் சஞ்சய்!
Baakiyalakshmi

இதை கேட்டு கொந்தளித்த கோபி, வீட்டில் அனைவரிடமும் இதை கூறுகிறார். இதனால் மனமுடைந்த செழியன் இன்றைய எபிசோட்டில், ஜெனி வீட்டிற்கு சென்று ரகளை செய்கிறார். அதில் ஜெனியின் தந்தையும், செழியனுக்கும் இடையே கை தகராறு ஆகிறது. அதில் செழியனும் அவரை அடிக்க கை ஓங்குகிறார். ஆனாலும் ஜெனியின் தந்தை ஜோசப், செழியனை அடித்து துரத்தி கதவை மூடிவிட்டார். இதனால் மனம் நொந்து போன செழியன் ரோட்டிலேயே படுத்துவிட்டார். இவரை பார்க்க வந்த எழில், செழியனுக்கு சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com