விஜய் மகன் கதைக்கு நோ சொன்ன சிவகார்த்திகேயன்... ஹீரோ இல்லாமல் திணறும் சஞ்சய்!

Jason Sanjay & Sivakarthikeyan
Jason Sanjay & Sivakarthikeyan

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க சிவகார்த்திகேயன் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

லைகா தயாரிக்கும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு கடந்தாண்டே வெளியானது. ஆனால் படத்தின் ஹீரோ யார் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு சென்றுள்ள நிலையில், அவரது மகன் சஞ்சய் திரையுலகில் அறிமுகமாகிறார். அப்பாவின் இடத்தை நிரப்ப ஹீரோவாக வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். பல முன்னணி இயக்குனர்கள் கேட்டும் கூட அவர் படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

சினிமா மேக்கிங், டைரக்‌ஷன் பற்றி லண்டனில் தனியாக கோர்ஸ் படித்துள்ள சஞ்சய், யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காமல் நேரடியாக இயக்குனராக களமிறங்கவுள்ளார். படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ரெடியானதுமே ஹீரோ யார் என்ற பேச்சுக்கள் கடந்தாண்டு முதலே பேசப்பட்டு வருகின்றன. தந்தையை வைத்து படம் இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், அது இல்லை என்பது உறுதியானது.

இதையும் படியுங்கள்:
ஹீரோ அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்... எந்த படத்தில் தெரியுமா?
Jason Sanjay & Sivakarthikeyan

அண்மையில் இவரது படத்தில், விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க உள்ளதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில், விஜய் மகன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மறுத்த சம்பவமும் நடந்துள்ளதாக கோலிவுட்டில் தகவல் ஒன்று கசிந்துள்ளது. எஸ்.கே-வை சந்தித்து கதை சொன்ன சஞ்சய்யிடம் படத்தில் தனக்கேற்ற அம்சங்கள் இல்லை எனக்கூறி சிவகார்த்திகேயன் ரிஜெக்ட் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com