ஈஸ்வரிக்கு என்னாச்சு? அனல் பறக்கும் புரோமோ... பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும்?

Baakiyalakshmi
Baakiyalakshmi

1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்று கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். ஒரு பக்கம் சந்தேகத்தின் உச்சியில் இருக்கும் ஜெனியிடம் செழியன் மாட்டி தவித்து கொண்டிருக்கிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென தாத்தாவாக இருக்கும் கோபி தனது 2வது மனைவி ராதிகா மூலம் மீண்டும் அப்பாவாகியுள்ளார்.

இந்த விஷயம் ஒட்டு மொத்த வீட்டிற்கு தெரிய வர, இது எனது வீடு அதனால் வீட்டை விட்டு கிளம்புங்கள் என்று பாக்கியா கோபியிடம் கூறினார். வீட்டை விட்டு போவதை தாங்கி கொள்ள முடியாத கோபி, பாக்கியாவை பழிவாங்குவதற்காக தனது தாய் ஈஸ்வரியையும் வீட்டிற்கு உடன் அழைத்து செல்கிறார்.

ராதிகா வீட்டிற்கு சென்ற ஈஸ்வரியால் தினமும் சண்டை, சச்சரவுகள் தான். இதனால் வீட்டில் ஒழுங்கா சாப்பிடாத ஈஸ்வரி அடிக்கடி முடியாமல் போய்கிறார். ராதிகாவின் அம்மா கமலாவிற்கும், ஈஸ்வரிக்கும் வரும் சண்டையால் கோபி அம்மாவை அழைத்து செல்லுமாறு பாக்கியாவிடம் கெஞ்சுகிறார். ஆனால் சற்றும் பாக்கியா பிடி கொடுக்காததால், ஈஸ்வரி அதே வீட்டிலேயே சண்டையை தொடர்ந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
மீண்டும் கூட்டு சேரும் பா.ரஞ்சித் - ஆர்யா... அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்!
Baakiyalakshmi

இந்த நிலையில் இன்று வெளியான புரோமோவில், ஈஸ்வரி மயங்கிய நிலையில் வீட்டில் கிடக்க, பதறியடித்த கோபி ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். தொடர்ந்து இதை பார்த்த பாக்கியா குடும்பத்தினர் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று கதறுகின்றனர். இது ஒரு புறம் இருக்க மருத்துவமனை வந்த ராதிகாவை, கோபி எனது அம்மாவுக்கு ஏதாவது ஆகினால் உன்னை சும்மா விட மாட்டேன் என திட்டுகிறார்.

தாத்தாவோ ஈஸ்வரியை நாங்களே வீட்டிற்கு அழைத்து செல்கிறோம் என கூற, கோபி நான் அம்மாவை விட மாட்டேன் என்னுடன் தான் மீண்டும் கூட்டி செல்வேன் என அடம் பிடிக்கிறார். இதனால் அடுத்து என்ன ஆகும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஈஸ்வரி கண் விழித்து என்ன சொல்வார் என பாக்கியா குடும்பத்தினர் ஆவலோடு காத்திருக்கின்றனர். தற்போது இந்த புரோமோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com