மீண்டும் கூட்டு சேரும் பா.ரஞ்சித் - ஆர்யா... அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்!

Pa.Ranjith - Arya
Pa.Ranjith - Arya

தங்கலான் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் படங்களிலும் சரி, தமிழ் சினிமாத் துறையிலும் சரி இரண்டிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் பா.ரஞ்சித். ஆதிக்க சமூகத்தை சேர்ந்த நாயகர்கள், அவர்களின் உயர்ந்த குணங்கள் என நாயக பிம்பத்தை உருவாக்கி வந்த பல வருட சினிமா வரலாற்றில், விளிம்புநிலை சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் கதைகளைப் பேசியவர். அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா என தனது அரசியலை வெவ்வேறு கதைக்களங்கள் மூலமாக தொடர்ந்து அணுகி வருகிறார்.

தற்போது விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் தங்கலான். ஸ்டுடியோ கிரீன் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: அஞ்சாமை - யாரை திருப்திபடுத்துகிறது?
Pa.Ranjith - Arya

கடந்த ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அகில இந்திய அளவில் இப்படத்திற்கான ப்ரோமோஷன்களை படக்குழு திட்டமிட்டு வருவதால் இந்தத் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஒருபக்கம் தங்கலான் படத்தின் ரிலீஸை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துவரும் நிலையில், பா.ரஞ்சித் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேன்ஸ் திருவிழாவில் அறிவிக்கப்பட்ட "வேட்டுவம்" திரைப்படம் விரைவில் உருவாக உள்ளது. வேட்டையாடுதலை மையமாகக் கொண்ட ஒரு பீரியட் படமாக அது இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், படத்தின் நாயகனாக அட்டக்கத்தி தினேஷ் அவர்கள் நடிக்க,வில்லனாக பிரபல நடிகர் ஆர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரபல நடிகர் அசோக் செல்வன் அவர்களும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே ஆர்யா - ரஞ்சித் கூட்டணியில் உருவான சர்பாட்டா பரம்பரை படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com