கமலா கொடுத்த புகார்... ஈஸ்வரியை கைது செய்ய வந்த போலீஸ்... அடுத்து என்ன நடக்கும்?

Baakiyalakshmi
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று மீண்டும் கோபி கமலாவிடம் சண்டைக்கு போக கடுப்பான மாமியார், ஈஸ்வரி மீது புகார் அளிக்க காவல் நிலையம் செல்கிறார்.

1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து, தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ராதிகா கரு கலைந்த பிறகு பல ட்விஸ்ட்களை கொண்டிருக்கிறது.

ராதிகாவின் கரு கலைந்ததற்கு ஈஸ்வரிதான் காரணம் என ராதிகாவும், கமலாவும் கோபியிடம் போட்டுக்கொடுக்க, தனது தாயை தவறாக நினைத்துக் கொள்கிறார் கோபி. இதனால் கொந்தளித்த கோபி, ஈஸ்வரிதான் ராதிகாவை கீழே தள்ளிவிட்டார் என நினைத்து தாயிடம் சண்டைக்குச் செல்கிறார். மேலும், தாயை வீட்டை விட்டு வெளியேற்றியதால் ஈஸ்வரி நிலைகுலைந்துள்ளார். வீட்டில் தினமும் அழுது கொண்டிருந்த ஈஸ்வரியை சமாதானம் செய்து, பாக்கியா வெளியூருக்கு காரில் அழைத்துச் சென்று மகிழ்ச்சி படுத்துகிறார்.

மேலும், ஈஸ்வரியின் பழைய சிநேகிதியை கண்முன் கொண்டு வந்து சர்ப்ரைஸ் செய்கிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த ஈஸ்வரி, மலரும் நினைவுகளாக தோழியிடம் பலவற்றை பகிர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, கஷ்டத்தின் எல்லைக்குச் சென்ற கோபி, மீண்டும் போதையை கையிலெடுக்கிறார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வர, ராதிகா கொந்தளித்து வருகிறார். ‘நானும்தான் குழந்தையை இழந்து தவிக்கிறேன். குடிக்கிறேனா’ எனக் கேட்டு சண்டை போடுகிறார்.

இப்படி, கடந்த சனிக்கிழமை எபிசோடில் கழுத்து வரை குடித்த கோபி, நிலை தடுமாறி விழுந்து கிடக்கிறார். இதனைப் பார்த்த செழியனும், எழிலும் தந்தையை ராதிகா வீட்டில் விட்டு விடுகின்றனர். தொடர்ந்து, ‘ஏன் இப்படிக் குடிக்கிறீர்கள்?’ என்று கேட்டு கோபியிடம் சண்டைக்குச் செல்கிறார் கமலா. போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த கோபி, கமலாவால்தான் பிரச்னை வந்தது. இனி, அவளுக்கு மரியாதை இல்லை என தரக்குறைவாகப் பேசுகிறார். இதனால் கோபமடைந்த கமலா உள்ளே சென்று விடுகிறார்.

இதையும் படியுங்கள்:
பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் 'பாட்டல் ராதா'... டீசர் எப்படி இருக்கு?
Baakiyalakshmi

அந்த வகையில் இன்று போதை தெளிந்த கோபியை மன்னிப்பு கேட்கச் சொல்லி ராதிகா வற்புறுத்துகிறார். அப்போது வாக்குவாதம் முற்றவே, கமலா மீண்டும் ஈஸ்வரியை கொலைகாரி எனச் சொல்ல, கோபமடைந்த கோபி, கமலாவை அறைய கை ஓங்குகிறார். இந்த சண்டை ஓய்ந்த பிறகு, ஹோட்டலுக்கு செல்கிறார் கோபி. தொடர்ந்து இன்றைய எபிசொட்டில் வீட்டிற்கு வந்த கோபியிடம் கமலா மீண்டும் சண்டைக்கு செல்கிறார். அப்போது கடுப்பான கோபி, மீண்டும் கோபமாகி கமலாவிடம் ஏய் என கத்துகிறார்.

இதற்கு ஒரு தீர்வு காண நினைத்த கமலா, தனது மகளின் கருவை கலைத்தார் என ஈஸ்வரி மீது போலீசில் புகார் அளிக்கிறார். எதுவும் தெரியாமல் மகிழ்ச்சியாக ஊரில் இருக்கும் ஈஸ்வரி திரும்பி வந்தால் மீண்டும் என்ன நடக்குமோ என்ற விறுவிறுப்பில் கதை செல்கிறது. இது ஒரு புறம் இருக்க போலீசார் பாக்கியலட்சுமி வீட்டிற்கு சென்று ஈஸ்வரியை கைது செய்ய வந்துள்ளோம் என கூற, மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com