பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் 'பாட்டல் ராதா'... டீசர் எப்படி இருக்கு?

Bottle Radha
Bottle Radha

குணச்சித்திர நடிகராக வலம்வரும் குரு சோமசுந்தரம் மீண்டும் ஹீரோவாக கலக்கும் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா'. தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கூத்துப்பட்டறை மாணவனாக தனது கலை பயணத்தை தொடங்கி, அதன் பிறகு பல மேடை நாடகங்களில் நடித்து புகழ் பெற்று, கடந்த 2011ம் ஆண்டு இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான "ஆரண்ய காண்டம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கலை உலகில் தனது பயணத்தை தொடங்கியவர் தான் குரு சோமசுந்தரம்.

இப்போது தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளின் பல திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்கள். இவர் நடிக்கும் எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும், அதில் தன்னுடைய கதாபாத்திரம் தனித்துவமாக தெரியும் வண்ணம் தனது நடிப்பை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர் குரு சோமசுந்தரம்.

இறுதியாக இந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள "பயமறியா பிரம்மை" என்கின்ற திரைப்படத்தில் நடித்துள்ள குரு சோமசுந்தரம். தற்பொழுது பிரபல இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் வழங்கும், "பாட்டல் ராதா" என்கின்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். சேன் ரோல்டன் இசையில், தினகரன் சிவலிங்கம் என்பவருடைய இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

விரைவில் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் வெகுவான வரவேற்பு பெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்:
உதவியவர்களுக்கு நன்றி... நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய நடிகர் வெங்கல் ராவ்!
Bottle Radha

டீசர் எப்படி இருக்கு?

குடியால் நாடே நாசமாக போயிட்டு இருக்கு என்பது அனைவரும் அறிந்ததே. இதை மையமாக வைத்து எத்தனை படம் வந்தாலும், நாடு இன்னும் மாறவில்லை. அந்த வகையில் இந்த படமும் ஒரு வித்தியாசமான கோணத்தில் குடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. மொத்தப் படமும் மதுவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் உணர்த்தும் வகையில் உருவாகியுள்ளதை டீசர் உணர்த்துகிறது.

மதுப்பிரியரான குரு சோமசுந்தரத்தின் ஜாலியான நடிப்பும், மாறனின் டைமிங் காமெடியும் கவனம் பெறுகிறது. “இன்னொரு தடவ குடிச்ச தாலிய சுழட்டி கடாசிட்டு போய்டே இருப்பேன்” என்ற மனைவியாக வரும் சஞ்சனா கதாபாத்திரம் பேசும் வசனம் அழுதுவடியாமல் அழுத்தமாக எழுதப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஊருபுறா டாஸ்மாக்க தொறந்து வைச்சுட்டு குடிக்கிறவன குத்தம் சொல்றது போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com