இனி ஹீரோ இல்லை... முழு நேர வில்லனாகும் கோபி... அவரே கொடுத்த அப்டேட்!

Baakiyalakshmi
Baakiyalakshmi

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் அவ்வப்போது, இந்த சீரியல் குறித்த அப்டேட் தெரிவித்து வரும் நிலையில், தற்போது வெளியிட்டுள்ள வீடியோ சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து, தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். ஒரு பக்கம் சந்தேகத்தின் உச்சியில் இருக்கும் ஜெனியிடம் செழியன் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த வார எபிசோட்டில் ராதிகா தவறி விழுந்ததில் கரு கலைந்து விட்டது.

இதனால் கொந்தளித்த கோபி, ஈஸ்வரி தான் தள்ளிவிட்டார் என நினைத்து தாயிடம் சண்டைக்கு செல்கிறார். இதனால் கதை விறுவிறுப்பாகியுள்ளது. பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் அவ்வப்போது, இந்த சீரியல் குறித்த அப்டேட் தெரிவித்து வரும் நிலையில்... தற்போது வெளியிட்டுள்ள வீடியோ சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

அந்த வீடியோவில் அவர் கூறி உள்ளதாவது, பாக்கியலட்சுமி சீரியல் சூட்டிங் மீண்டும் ஆரம்பிச்சாச்சு. கதையில நிறைய ட்விஸ்ட் அண்ட் திரில்லிங் எல்லாம் இருக்க போகுது. மனசுக்கு ரொம்ப நெருடலான விஷயங்கள் எல்லாம் நடக்க போகுது, என்று சொல்லி இருக்கின்றனர். ஆனால் அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது. ஆனால் இவை அனைத்தையும் நீங்கள் என்ஜாய் பண்ணுவீங்க என்று நினைக்கிறேன். அதேபோல் கடந்த வார எபிசோட் குறித்து நூற்றுக்கணக்கான மெசேஜ் எனக்கு வந்தது. அனைவருக்கும் நன்றி. உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் கோடி நன்றிகள். இன்னும் பெட்டர் லெவல் வில்லனாகவும், காமெடியனாகவும் நடிக்க ட்ரை பண்ணுகிறேன். உங்களின் அன்பு ஆதரவு தான் இதற்கு மிகப்பெரிய மோட்டிவேஷன் என கூறியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். இனி சீரியல் கதை மிகவும் விறுவிறுப்பாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com