"ரொம்ப பிஸியா" ராதிகாவை திட்டி அனுப்பிய கோபிநாத்.!

Baakiyalakshmi
Baakiyalakshmi Gopi - Radhika
Published on

இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்டில் மருத்துவமனைக்கு பார்க்க வந்த ராதிகாவை கோபிநாத் திட்டுகிறார்.

இனியாவின் புலம்பலையும், ராதிகாவின் வெறுப்பையும் பெற்ற கோபிநாத் மனமுடைந்து காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வலி தாங்கமுடியாமல் கோபி அடித்த போனை ராதிகாவும், அவரது அம்மாவும் உதாசிணப்படுத்தவே, பாக்கியலட்சுமி போனை அட்டண்ட் செய்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு ஓடோடி கோபிநாத்தை காப்பாற்றினார். இந்த சம்பவம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆன கோபிநாத்திற்கு பைபாஸ் சர்ஜரி செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள்.

சம்பவ இடத்திற்கு வந்த ஈஸ்வரி ராதிகாவிடம் கூறக்கூடாது என சண்டையிட்டு மனைவி என்ற பெயரில் பாக்கியலட்சுமியை கையெழுத்திட வைத்தார். தொடர்ந்து கோபிநாத் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து மருத்துவமனை வந்த ராதிகாவை ஈஸ்வரி வறுத்தெடுத்து விட்டார். மேலும் செழியனும் புரிந்து கொள்ளாமல் நீங்கள் புறப்படுங்கள் நாங்கள் எங்கள் அப்பாவை பார்த்து கொள்கிறோம் என கூறுகிறார். மனமுடைந்த ராதிகா ஓரமாக நின்று அழுக, ஈரமுள்ள பாக்கியலட்சுமி ஈஸ்வரியை கடைக்கு அனுப்பிவிட்டு ஒருமுறை கோபியை பார்க்க ராதிகாவிற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.

நேற்றைய எபிசோட்டில் ஆபரேஷன் முடிந்து நார்மல் வார்டுக்கு வந்த கோபிநாத்தை பார்க்க வந்த ராதிகா பாக்கியாவிடம் அழுது புலம்பினார். இந்த காட்சிகள் ரசிகர்களை மனதை வெகுவாக நெருடியது. தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி பாக்கியாவை சரமாரியாக திட்டுகிறார். ஏன் கோபியை பார்க்கவில்லை, ராதிகாவை அனுமதிக்கிறாய் என்று. அதற்கு பாக்கியா ராதிகாதான் அவரின் மனைவி என விளக்கமளிக்கிறார். ஆனால் எதையும் கேட்காத ஈஸ்வரி அவள் தான் இந்த நிலைமைக்கு காரணம் டிஸ்சார்ஜ் முடிந்தவுடன் கோபியை இந்த வீட்டிற்கு தான் அழைத்து வருவேன் என கூறுகிறார். இதற்கு பாக்கியா மறுப்பு தெரிவிக்கவே, உன் பெயரில் வீடு இருப்பதால் அப்படி கூறுகிறாயா என கேட்கிறார்.

இதையும் படியுங்கள்:
இதனால்தான் 7 வருஷமா என் வீட்டுக்கு போகல – ராம்கி ஓபன் டாக்!
Baakiyalakshmi

தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த ராதிகாவை, எழில் யாரும் இல்லை போய் கோபியை பாருங்கள் என கூறுகிறார். உள்ளே வந்த ராதிகாவை பார்த்த கோபிநாத் முகத்தை சுழித்து கொண்டு திரும்பி படுத்து கொள்கிறார். பிறகு ரொம்ப பிஸியா என கேட்கிறார். நெஞ்சு வலி வந்த போது முதலில் உனக்கு தான் போன் செய்தேன் அப்போதும் உதவவில்லை, ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகி இத்தனை நாட்கள் ஆகிறது. நீ இப்போ தான் வந்து பாக்குறியா என கேட்கிறார். அதற்கு ராதிகா, நான் வந்துட்டுதான் இருக்கேன் உங்க வீட்டார் தான் என்னை பார்க்கவிடவில்லை என கூறி முடிப்பதற்குள், மீண்டும் ஈஸ்வரி உள்ளே வருகிறார்.

அதோடு இல்லாமல் கோபி முன்னாடியே உன்ன இங்க வரக்கூடாது என சொன்னேன்ல என கூறுகிறார். அதற்கு ராதிகா நான் ஏன் வரக்கூடாது, நான் ஏன் கோபியை பார்க்ககூடாது என கேட்கிறார். அதற்கு இப்படி தான் நீ தினமும் பிரச்சனை செய்ற, அது கோபிக்கு தான் பிரச்சனை அதனால தானே உன்ன போக சொன்னேன் என நல்லவர் போல் கோபி முன்னாடி நாடகமாடுகிறார். ஏற்கனவே ராதிகா மீது இருந்த கோபம் கோபிக்கு உச்சத்திற்கு செல்கிறது. இது என்ன நடக்கபோகுது என்றுதான் பார்க்கவேண்டும். ரசிகர்கள் அனைவரும் மீண்டும் கோபி பாக்கியா வீட்டிற்கு தான் செல்வார் என கருத்து கூறி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com