அவ்வை சண்முகி அவதாரம் எடுத்த கோபி... பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!

பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி

1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்று கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். ஒரு பக்கம் சந்தேகத்தின் உச்சியில் இருக்கும் ஜெனியிடம் செழியன் மாட்டி தவித்து கொண்டிருக்கிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென தாத்தாவாக இருக்கும் கோபி தனது 2வது மனைவி ராதிகா மூலம் மீண்டும் அப்பாவாகியுள்ளார்.

இந்த விஷயம் ஒட்டு மொத்த வீட்டிற்கு தெரிய வர, இது எனது வீடு அதனால் வீட்டை விட்டு கிளம்புங்கள் என்று பாக்கியா கோபியிடம் கூறினார். வீட்டை விட்டு போவதை தாங்கி கொள்ள முடியாத கோபி, பாக்கியாவை பழிவாங்குவதற்காக தனது தாய் ஈஸ்வரியையும் வீட்டிற்கு உடன் அழைத்து செல்கிறார்.

ராதிகா வீட்டிற்கு சென்ற ஈஸ்வரியால் தினமும் சண்டை, சச்சரவுகள் தான். இதனால் வீட்டில் ஒழுங்கா சாப்பிடாத ஈஸ்வரி அடிக்கடி முடியாமல் போய்கிறார். தொடர்ந்து நேற்றைய எபிசோட்டில் சாப்பிடாமல் ஈஸ்வரி மயக்கம் போட இன்று அவர் மீண்டும் நன்றாக ராதிகா வீட்டிற்கே வருகிறார். இனிமேல் ஈஸ்வரி இங்கு வரமாட்டார் என்று நினைத்து கொண்டிருந்த கமலா, ராதிகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையும் படியுங்கள்:
எதிர்நீச்சல் இயக்குனர் வீட்டில் களைகட்டிய விஷேசங்கள்... பிரபலங்கள் பங்கேற்பு!
பாக்கியலட்சுமி

இந்த நிலையில் இன்று வெளியான புரோமோவில், அம்மாவை நன்றாக கவனித்து கொள்வேன் என அழைத்து வந்த கோபி, பாக்கியாவை பார்த்து வியக்கிறார். வீட்டையும் பார்த்து கொண்டு கேண்டீனையும் எப்படி பார்க்கிறார் என ஆச்சரியப்படுகிறார். தொடர்ந்து தானும் அந்த அவதாரம் எடுக்க வேண்டும் என எண்ணி ஹோட்டல், வீடு, அம்மா என 3-ஐயும் சரிக்கு சமமாக பார்க்கிறார்.

மேலும் பாக்கியாவிடம் சென்றே அட்வைஸ் கேட்கிறார். அதற்கு பாக்கியா நீங்கள் தான் ஜீனியஸே எனக்கு தெரியாது என கூறிவிட்டு செல்கிறார். இந்த புரோமோ காட்சி வெளியான நிலையில், தற்போது யூடியூப்பில் டாப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com