எதிர்நீச்சல் இயக்குனர் வீட்டில் களைகட்டிய விஷேசங்கள்... பிரபலங்கள் பங்கேற்பு!

Thiruchelvam daughter married
Thiruchelvam daughter married

சன் டிவியில் ஒளிப்பரபாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் வீட்டில் களைகட்டிய விஷேசத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி பட்டி தொட்டி எல்லாம் பேமஸான கோலங்கள் சீரியலின் இயக்குனரும், அந்த சீரியலில் தொல்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் இயக்குனர் திருச்செல்வம் தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர், சின்னத்திரையில் மீண்டும் திரும்பி எதிர்நீச்சல் சீரியலை எடுத்து வந்தார்.

இந்த சீரியலும் 3 ஆண்டுகளாக ஓடி மெகா ஹிட் ஆன நிலையில் தற்போது இதற்கு எண்ட் கார்ட் போட்டுள்ளார். சீரியலை முடித்த கையோடு, மகளின் திருமணத்தையும் நடித்து முடித்துள்ளார் இயக்குனர் திருச்செல்வம்.

திருச்செல்வம் மகள் பிரியவர்ஷினியின் திருமணம் நேற்று நடைபெற்றிருக்கிறது. அப்போது எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள், சின்னத்திரை வட்டாரங்கள் என்று பலரும் அந்த பங்க்ஷனில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
அன்பே வா சிரீயல் நடிகைக்கு விரைவில் டும்டும்டும்... மாப்பிள்ளை இந்த நடிகரா?
Thiruchelvam daughter married

அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலை திருச்செல்வம் இவ்வளவு அவசரமாக முடிப்பதற்கு காரணம் அவருடைய மகள் திருமணம் தானா? மகள் திருமண வேலை அதிகமாக இருந்ததால் தான் இயக்குனர் சீரியலை முடித்து விட்டாரா? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் இயக்குனர் திருச்செல்வத்தின் மகள் பிரியதர்ஷினியின் திருமணத்திற்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com