Baakiyalakshmi: இனியாவுக்கு வந்த சிக்கல்… உதவி செய்த கோபி… எச்சரித்த ராதிகா!
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவிற்கு 15 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. பாக்கியாவிடம் காசு இல்லாததால் இனியா கோபியிடம் சொல்லிப் புலம்புகிறார். இனி என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
நேற்றைய எபிசோடில் பழனிச்சாமி பாக்கியா ரெஸ்டாரண்டிற்கு வருகிறார். வந்துப் பார்த்துவிட்டு என்ன ஆள் குறைஞ்சுட்டாங்க போலையே என்று கூறுகிறார். அதற்கு பாக்கியா ஆமாம் சார் மூன்று பேரு தான் இருக்காங்க என்று கவலையுடன் சொல்கிறார். அதற்கு பழனிச்சாமி சரி விடுங்க, ரெஸ்டாரன்ட் தொடங்கும்போது இப்படிதானே இருந்துச்சு… போக போக சரியாகிரும்னு சொல்கிறார். ஆனால் அப்போ கெட்ட பேரு இல்லையே என்று பாக்கியா சொல்லி வருத்தப்படுகிறார். அப்போது பழனிச்சாமிக்கு ஒரு போன் வருகிறது.
பேசிவிட்டு பாக்கியாவிடம் எனக்கு ஒரு அர்ஜன்ட் வேலை வந்திருக்கு 2 மாசம் துபாய் போனும் என்கிறார். அதற்கு பாக்கியா கவலைப்படுகிறார்.
உடனே செல்வி என்னக்கா கவல படுறீங்களானு கேட்கிறார். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் அவரிடம் தான் சொல்லுவேன் ஆனால் நமக்காக அவர் அவருடைய வேலையை பார்க்க வேண்டாம் என்று சொல்லக்கூடாது இல்ல. அவர் போயிட்டு வரட்டும் என்று சொல்கிறார். அடுத்ததாக கோபி சொன்ன ப்ரொடியூசரை எழில் வந்து பார்த்து அவரிடம் கதையை சொல்கிறார்.
அவர் கதையை கேட்டுவிட்டு சில கேள்விகள் கேட்கிறார். இறுதியில் படம் பண்ணலாம் என்று ஒப்புக்கொள்கிறார். இதை வீட்டுக்கு வந்து சொன்னவுடன் பாக்கியாவும் அமிர்தாவும் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள். இதனையடுத்து நாளையிலிருந்து நானும் ரெஸ்டாரன்ட் வருகிறேன் என்று அமிர்தா சொல்கிறார். இத்துடன் நேற்றைய எபிசோட் முடிவடைகிறது.
இதனையடுத்து இன்று இனியா டேன்ஸ் மாஸ்டருக்கு 15000 கொடுக்க வேண்டும், என்னை சேர்த்துவிடுங்கள், என் friends எல்லாம் சேர்ந்துட்டாங்க என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா தன்னிடம் இப்போது காசு இல்லை என்று சொல்கிறார். இதனால் ஜெனி தான் செழியனிடம் கேட்பதாக சொல்கிறார். அதற்குள் இனியாவிற்கு கோபி போன் செய்கிறார்.
அவர் என்ன விஷயம் என்று கேட்டவுடன். இனியா இந்தக் கதையை சொல்கிறார். உடனே கோபி ஆறுதல் கூறி பாக்கியாவை பற்றியும் கடுப்பாக பேசுகிறார். பிறகு நான் தருகிறேன் என்று கூறுகிறார். அதற்கு ராதிகா நீங்க பண்றதுல எது தப்பு எது சரினு சொல்றதுக்கு எனக்கு உரிமை இருக்கு என்று சொல்கிறார். ஆனால், அதற்கும் கோபி பதில் கூறிவிட்டு, அடுத்த நாள் சென்று பணம் கட்டி சேர்த்துவிடுகிறார்.
இதற்கு பிறகு என்னவாகும் என்பதை எபிசோடில்தான் முழுவதுமாக பார்க்க வேண்டும்.