விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், பாக்கியா இனியா மாமனாரிடம் இனியாவிற்காக சண்டைப் போடுகிறார்.
இனியா குறித்து பேச இனியா மாமனாரான சுதாகரைப் பார்க்க பாக்கியா மற்றும் கோபி இருவரும் வருகிறார்கள். முதலில் ஆகாஷ் விஷயத்தைப் பற்றி பேசுகின்றனர். அப்போது சுதாகர், நிதிஷ் பண்ணது தப்புதான், இனி அந்த பிரச்சனை வராத மாதிரி நான் பாத்துக்குறேன் என்று கூறுகிறார். பின் பாக்கியா, இனியாவை வேலைக்கு அனுப்பி வைக்கும்படி கூறுகிறார். ஆனால், எங்கள் வீட்டு மருமகள் அப்படியெல்லாம் வேலைக்கு போக முடியாது என்று சுதாகர் கூறவும், பாக்கியாவிற்கு தலைக்கு மேல் கோபம் வருகிறது. ஆனால், கோபி அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வருகிறார்.
அவர்கள் போனதும், சுதாகர் இனியாவை அழைத்து பேசுகிறார். ஏதாவது பிரச்சனைன்னா எங்ககிட்ட சொல்ல வேண்டியது தானே... எதுக்காக எல்லாத்தையும் உன் வீட்ல சொல்லிட்டு இருக்க. உன் அம்மா, அப்பா வந்து பேசி இருந்தாங்க. உனக்கு ஏதாவது வேணும்னா எங்ககிட்டயே கேளு. நீ வேலைக்கு போகணும் ஆசைப்பட்டீல. உனக்கு ரெஸ்டாரண்ட் பிசினஸ் சரி வரது. நீ உன்னோட மீடியா வேலைக்கே போ. நிதிஷுக்கும் நீ வேலைக்கு போறதுல எந்த பிரச்சனையும் இல்லை, என சொன்னதும் சந்தோஷத்தில் குதித்து பாக்கியாவிற்கு போன் செய்து தாங்க்ஸ் சொல்கிறார்.
இதற்கிடையே வீட்டுக்கு வந்த பாக்கியாவும் கோபியும் பேசுகிறார்கள். எதற்காக என்னை அழைத்து வந்தீர்கள், அவர் எப்படி பேசுகிறார் என்று பார்த்தீர்கள்தானே என்று கத்துகிறார். அதற்கு கோபி, நீ சொன்னத கேக்காம, இனியாவுக்கு அங்க கல்யாணம் செய்து வைத்தது தப்புதான், நானே இதல்லாம் சரி செய்கிறேன் என்று கூறுகிறார். அப்போது ஈஸ்வரி வந்து என்ன பிரச்சனை என்று கேட்கிறார். கோபி பாக்கியாவிடம் கண்ணடித்துவிட்டு, ஈஸ்வரியிடம் பிஸினஸ் பிரச்சனை என்று சொல்லி சமாளிக்கிறார்.
இதனையடுத்து அங்கு வரும் வயசான நபர் ஒருவருக்கு, சின்ன வயதில் அவர் அம்மா செஞ்சு கொடுத்த ஸ்வீட்டை செய்து கொடுக்கிறாள் பாக்யா. அப்போது அங்கு வரும் கவுன்சிலர் இதையெல்லாம் கவனிக்கிறான். பாக்யா கொடுத்த ஸ்வீட்டை சாப்பிட்ட முதியவர் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். என் அம்மா கையாள சாப்பிட்ட மாதிரியே இருக்கு என நெகிழ்ச்சியாக சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதைப் பார்த்த கவுன்சிலர், எந்த சண்டையும் போடாமல், சாப்பிட்டதுக்கு காசு கொடுத்துவிட்டு அமைதியாக செல்கிறார். இதைப் பார்த்த பாக்கியா மற்றும் செல்விக்கு ஆச்சர்யம்தான்.