பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு விரைவில் டும்டும்டும்!

kanmani aswath
kanmani aswath

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு சத்தம் இல்லாமல் நிச்சயதாரத்தம் முடிந்த நிலையில், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் பிரபலமாக ஓளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த நடிகர்கள் தற்போது அடுத்த கட்டத்தில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருந்த தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்ந்தது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து முடியும் வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத், கண்ணம்மாவாக ரோஷினி பாரதியாக நடித்து இருந்தார். பின் இவர் இடையில் சீரியலில் இருந்து ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார்.

கர்ப்பிணி பெண்ணான கண்ணம்மா கேரக்டர் நெடுந்தூரம் நடந்தே சென்று அது ட்ரோல் செய்யப்பட்டதால் இந்த சீரியல் மிகவும் வைரலானது. இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி, மீபத்தில் சூரி நடிப்பில் வெளியாகி இருந்த ‘கருடன்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்தும் இவர் சில படங்களில் கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது. சில இந்த சீரியலில் நடித்த சில நடிகர்கள் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சம்பளமே வேண்டாம் என்று சொன்ன நடிகை – கலைப்புலி எஸ் தாணு சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்!
kanmani aswath

பாரதி கேரக்டரில் ஹீரோவாக நடித்த அருணை தான் பிக்பாஸ் அர்ச்சனா காதலிப்பதாக கூறப்படுகிறது. வில்லியாக இருந்த வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த ஃபரீனா தற்போது குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார். அந்த வகையில் இந்த சீரியலில், கண்ணம்மாவுக்கு வில்லியாகவும், தங்கையாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் கண்மணி மனோகரன். பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்த பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவிய கண்மணி, அதில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் என்கிற சீரியலில் நடித்தார். அந்த சீரியலில் அமுதா, பவானி என இரட்டை வேடங்களில் நடித்து அசத்தினார் நடிகை கண்மணி மனோகரன்.

இந்த நிலையில், சீரியல் நடிகை கண்மணிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அவர் அஷ்வத் என்பவரை காதலித்து வந்த நிலையில், அந்த ஜோடிக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. அஷ்வத்தும் டிவி பிரபலம் தான். அவர் சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். கண்மணி மனோகரன் - அஷ்வத் ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் உறவினர்கள் முன்னிலையில் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. அவர்களது திருமண வரவேற்பில் எடுத்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். சன் டிவி தொகுப்பாளருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்பதால் இவர்களுக்குள் இப்படி ஒரு காதல் ஓடி கொண்டிருந்ததா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com