கலைப்புலி எஸ். தாணு 34 ஆண்டுகளுக்கு முன்பு, தான் இயக்கிய ஒரு படத்தைப் பற்றிய ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.
இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கும் கலைப்புலி எஸ்.தாணு தமிழ் சினிமா உலகில் ஒரு மிக முக்கிய நபராவார். ஆகையாலேயே அவருக்கு கலைப்புலி என்ற பட்டம் வந்தது. இவர் கடந்த 1985ம் ஆண்டிலிருந்து சினிமா உலகில் தனது பெரும் பங்கை ஆற்றிவருகிறார். இவருடைய இயக்கத்தில் வெளியான ஒரு படம் புதுப்பாடகன்.
இப்படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருப்பார். அதேபோல் அவருக்கு ஜோடியாக அமலா நடித்திருந்தார். இப்படம் 1990ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்திற்கு தாணுவே இசையையும் அமைத்தார் என்பதே சுவாரஸ்யமான விஷயம். புதுப்பாடகன் படம் அந்த சமயத்தில் தமிழகம் எங்கும் வெளியாகி நல்ல வசூலை ஈட்டியது.
இந்தப் படம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் கலைப்புலி எஸ். தாணு.
அதாவது இப்படத்தின் நடிகை அமலா. இவரிடம் படத்தின் கதையை கூறிவிட்டு ஓகே வாங்கும்போது சம்பளமாக ஐந்து லட்சம் பேசப்பட்டதாம். அதற்கு அட்வான்ஸாக 1 லட்சத்து 60 ஆயிரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் படப்பிடிப்பு ஆரம்பமாகி நல்லப்படியாக போய்க்கொண்டிருந்தது.
தாணுவின் இயக்கத்தையும் அவரது பணி மற்றும் ஈடுபாடையும் கவனித்த அமலா அவரை வியந்துப் பார்த்திருக்கிறார். ஆகையால், அமலா, தனது மீதி சம்பளமான இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொள்ளவே இல்லை என்று தாணு நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
அன்றைய காலத்தில் ஒரு நடிகை வாங்கும் ஐந்து லட்சமும், இந்தக் காலத்தில் ஒரு நடிகை வாங்கும் 3 கோடியும் சமம்தான். ஏனெனில், அப்போது லட்சம் என்பது மிகப்பெரிய விஷயம். அப்பவே ஒருவரின் ஈடுபாடு பார்த்து 2 லட்ச ரூபாயை வாங்கவே இல்லை என்றால் அது அப்போதைக்கு பெரிய விஷயம்தானே. ஆகையால்தான் இந்தச் சம்பவம் அவர் மனதில் பதிந்துவிட்டது.