பிக்பாஸ் 'சிப்ளி வேஸ்ட்' ?

vikraman Amuthvanan
vikraman Amuthvanan
கல்கி டெஸ்க்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

அனைவராலும் மிகவும் ஆவலுடன் விரும்பப்படும் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி சில நாட்களாக நடைபெற்று வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோக்களில் முதலிடம் வகிக்கிறது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கான மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர். எப்போதும் இல்லாத அளவிற்கு 21 போட்டியாளர்களை கொண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது வரை 7 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர்.

இரண்டாவது வாரம் ஜிபி முத்து தானாக முன் வந்துவெளியேறிவிட, நடன இயக்குனர் சாந்தியை எலிமினேட் செய்து அனுப்பியுள்ளனர். மூன்றாவது வாரத்தில் அசல் கோளாறு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். தற்போது நான்காவது எலிமினேஷனாக ஷெரினாவும், ஐந்தாவதாக மஹேஸ்வரியும், ஆறாவதாக நிவாஷினியும், ஏழாவதாக ராபர்ட்மாஸ்டரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் .

Maina -  Manikandan
Maina - Manikandan

முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த முறை இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரம் ஒளிபரப்பும் வகையில் டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் ஹவுஸ் மேட்ஸ் செய்யும் அனைத்து விஷயங்களையும் லைவ்வாக பார்க்க முடிகிறது. கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் சண்டை, சச்சரவு தொடர்ந்து கொண்டே இருந்தது. மேலும் தொடர்ந்து விதிமீறல்கள் நடந்து வந்தது. இதனால் பலரும் நிகழ்ச்சியை ஒழுங்காக கொண்டுசெல்லுமாறு கமலஹாசனுக்கு கோரிக்கை வைக்க, அவரும் வார இறுதி நாட்கள் எபிசோடில் வந்து போட்டியாளர்களை வறுத்து எடுத்து விட்டார். தற்போது 14 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடர்கிறது.

இந்த வாரத்திற்கான குறைவான பங்கெடுப்பு கொண்ட போட்டியாளர்கள் என்ற வரிசையில் அசிம் மற்றும் மைனா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் கழுத்தில் 'சிம்பிளி வேஸ்ட்"என்கிற பதாகையை பிக்பாஸ் அணிந்து கொள்ள சொல்கிறார். அப்போது மைனா கோபமாக இந்த வீட்டில் பல வேஸ்ட் நபர்கள் இருக்கும்போது எனக்கு ஏன் அணிகிறீர்கள் என்று கடுப்பில் கேட்டுவிட்டு எழுந்து செல்கிறார்.

quency
quency

ஞாயிற்றுக்கிழமை எபிசோட் இன்று முடிவடைந்த நிலையில் எலிமினேஷன் பற்றி தற்பொழுது உறுதியான தகவல் வெளியாகியுள்ளது, ஏற்கனவே ரசிகர்கள் எதிர்பார்த்தது தான் ஏனென்றால் குயின்சி சரியாக விளையாடவில்லை அது மட்டும் இல்லாமல் அவர் பெரிதாக விளையாட்டில் கவனம் செலுத்தாததால் அவர் வெளியே செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது அதேபோல் தற்பொழுது அவர் வெளியே சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் பிக் பாஸ் ஷோவிற்கு கமல் வந்திருக்கிறார் அவர் அசிமை கடுமையாக திட்டி உள்ளார் ஆத்திர காரனுக்கு புத்திமட்டும் என சொல்லுவாங்க அசீம் நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா இனிமையாவது உங்களை மாற்றிக் கொள்வீர்கள் என நினைக்கிறேன் ஆனால் மாறவே இல்லையே என வறுத்து எடுத்திட்டார். இறுதியாக இந்த வாரம் இருப்பதிலேயே மிக குறைவான வாக்குகள் பெற்று குயின்சி எலிமினேட் ஆகி வெளியேறினார்.

logo
Kalki Online
kalkionline.com