ஜாக்பாட் டாஸ்கில் நேரடியாக மோதிகொள்ளும் Big Boss போட்டியாளர்கள்... அனல் பறக்கும் ப்ரோமோ !

ஜாக்பாட் டாஸ்கில் நேரடியாக மோதிகொள்ளும் Big Boss போட்டியாளர்கள்... அனல் பறக்கும் ப்ரோமோ !
Updated on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் பிக் பாஸ் முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படும் விதமாக அமைந்துள்ளது. அதன்படி இன்று வெளியான ப்ரமோவில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இடையில் ஜாக்பாட் டாஸ்க் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் 68-வது நளிற்கான ப்ரோமோ வீடியோக்களை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில்  இன்று பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு ஜாக்பாட் டாஸ்க் வழங்கப்படுகிறது.

இந்த டாஸ்கில் வெற்றிப்பெறுபவர்களுக்கு 5 ஸ்டார்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அதற்கு தகுதியானவர்களா இல்லையா என்ற வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது விஷ்ணுவிற்கும் விஜய்க்கும் இடையே நேரடியாக வாக்குவாதம் தொடங்கியது. இதில் ஒருவரை ஒருவர் மாறிமாறி குறைக்கூறிக்கொண்டு மோதுவது அந்த வீடியோவில் வெளியாகியுள்ளது.

அதேபோல், பூர்ணிமா, விக்ரம் ஆகியோர் அர்ச்சனாவை குறிவைத்து பேசுகிறார்கள். இந்த ஜாக்பாட் டாஸ்கில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பது இன்றைய நிகழ்ச்சியில்தான் தெரியவரும். அதேபோல், ஜெயிக்கும் போட்டியாளருக்கு என்ன பரிசு காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com