பிக்பாஸ் விக்ரம் எடுத்த திடீர் முடிவு.. ரசிகர்கள் ஷாக்!

bigg boss vickram
bigg boss vickram

பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் என ட்ரோல் செய்யப்பட்ட விக்ரம் போட்ட இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிக்பாஸ் 6 சீசன்கள் முடிந்த நிலையில், 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கி வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இதில் அர்ச்சனா வெற்றியாளராகவும், மணி ரன்னராகவும் அறிவிக்கப்பட்டார்.

இதில் அதிக ட்ரோல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர் சரவண விக்ரம். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான இவர் பிக்பாஸில் இருப்பதே வேஸ்ட் என ட்ரோல் செய்யப்பட்டார். இரவில் மிச்சர் திருடி சாப்பிடுவது, மாயாவின் பேச்சை கேட்பது என செயல்பட்டு வந்தார். ஃப்ரீஸ் டாஸ்க்கில் வந்த அவரது சகோதரி கூறியும் விக்ரம் திருந்திய பாடில்லை. வெளியே வந்து மீண்டும் கடைசி நாள் உள்ளே சென்ற போது கூட அவர் அதே போன்று செயல்பட்டார். இதனால் கடுப்பான அவரது சகோதரி கடுமையாக போஸ்ட் போட்டிருந்தார்.

Biggboss Vickram
Biggboss Vickram

இந்த நிலையில், அவர் இன்ஸ்டாவில் ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில், அவர் "I quit my passion" என குறிப்பிட்டு இருப்பதால், நடிப்பதை தான் நிறுத்தப்போகிறார் என அதிர்ச்சி தகவல் பரவி வருகிறது. இந்த போஸ்ட்டில் ஸ்க்ரீன் ஷாட் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் சரவண விக்ரம் அதை நீக்கியுள்ளார். இருந்தாலும் அவர் இந்த போஸ்டை போட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

இதையும் படியுங்கள்:
இதயத்தை பலப்படுத்தும் ஆத்தாப் பழம்!
bigg boss vickram

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com