Biggboss 7 | முடிவுக்கு வந்ததா வினுஷா பிரச்சனை.. விளக்கம் சொல்லும் நிக்சன்.!

வினுஷா நிக்சன்
வினுஷா நிக்சன்
Published on

பிக்பாஸ் வீட்டில் வினுஷாவுக்கு நடந்த உருவகேலியை தொடர்ந்து பைனல்ஸ் நெருங்கும் நிலையில் இன்று நிக்சன் அதற்கு விளக்கமளிக்கிறார்.

பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா மூலம் அறிமுகமானவர் நடிகை வினுஷா. மாடலிங் துறையில் இருந்து நடிக்க வந்த வினுஷாவுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் 7 விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், தானுண்டு தன் வேலையுண்டு இருந்த வினுஷா திடீரென எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிக்ஸன் பேசியதாக ஒரு கருத்து ஒளிபரப்பப்பட்டது. அதில், நிக்ஸன் வினுஷாவின் உடல் அமைப்பு குறித்து கொச்சையாக பேசியிருப்பார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். பிக்பாஸில் உருவகேலி நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்தன.

இந்த நிலையில் பைனல்ஸுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மீண்டும் அனைத்து போட்டியாளர்களும் வீட்டிற்குள் ஒன்றிணைந்துள்ளனர். இதுவரை எந்த பிக்பாஸிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் புதுவிதமாக மீண்டும் போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்று வெளியில் நடப்பது பற்றி பேசி வருகின்றனர். இதனால் பிரச்சனை ஓய்ந்தவாறு தெரியவில்லை. பிக்பாஸ் முடியும் கடைசி வரையிலும் சண்டை எகிறு கொண்டு தான் போகிறது.

நேற்றைய எபிசோட்டில் ஜோவிகா தூண்டிவிட்டதன் பேரில், மாயா அர்ச்சனாவுடன் சண்டைக்கு சென்றார். இன்றைய எபிசோட்டில் வீட்டிற்குள்ளே வரும் நிக்சனிடம் வினுஷா தனக்கு நடந்த அவலம் குறித்து பேசுகிறார். இதற்கு நிக்சனும் தனது மலுப்பலான பதிலை கூறுகிறார். மன்னிப்பு கேட்டால் விடுங்கள்; அதையே ஏன் பேசுகிறீர்கள் என கடுப்பாகிறார். இது தொடர்பான புரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com