இந்த வாரம் இவங்க தான் நாமினேஷன்... பிக்பாஸ் 7 அப்டேட்!

மணி - ரவீனா
மணி - ரவீனா

பிக்பாஸ் 7வது சீசனில் இந்த வார நாமினேஷன் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரே வீட்டில் வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்கள் எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் சக மனிதர்களுடன் நடந்துக் கொள்ளும் விதம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்து 7வது சீசனில் காலடி எடுத்து வைக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் புதுபுது அப்டேட்கள் மூலம் “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என ரசிகர்களை எப்படியாவது கட்டிப்போட்டுவிடும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியுள்ளது.

தினமும் இந்த சீசனில் பல விஷயங்கள் நடைபெற்று வருகிறது. 80 நாட்களை கடந்த பிக்பாஸ் 7இல் கடந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. இதில் அனைவரின் பெற்றோர்களும், உறவினர்களும் வீட்டிற்கு உள்ளே சென்று அனைவரையும் குதூகலித்தனர்.

இதையும் படியுங்கள்:
அன்பு சச்சரவுகளை குறைக்கும்... ப்ரீஸ் டாஸ்க்கின் முடிவு இதுதான்... பிக்பாஸ் புரோமோ!
மணி - ரவீனா

தொடர்ந்து கடந்த வார இறுதியில் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டார். திங்கட்கிழமையான இன்று நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் மாயா, நிக்சன், தினேஷ், மணி, ரவீனா, விஷ்ணு ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் யார் வெளியேறுவார் என்று இந்த வார இறுதியில் தான் தெரியவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com