பிக்பாஸ் 7வது சீசன் தொடங்கி 47வது நாள் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒருவரின் வேடத்தை அணிந்து அவர்களை போலவே நடித்து கலக்கி வருகின்றனர்.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 7வது சீசன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் சமூக வலைதள பக்கம் சென்றாலே பிக்பாஸ் என்றுதான் வரும் . அந்த அளவிற்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது பிரதீப் சம்பவம். பெண்கள் பாதுகாப்பு என்று கூறி பலராலும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிரதீப் வெளியேற்றப்பட்டார்.
இதற்கு பொதுமக்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். தொடர்ந்து கடந்த வாரம் மாயா கேப்டன்சியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்த 2 பிரச்சனைகளுக்கும் சேர்த்து கமல்ஹாசன் கடந்த வார இறுதியில் அனைவரையும் லெஃப்ட் ரைட் வாங்கினார்.
தொடர்ந்து இந்த வாரம் தினேஷ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 3 நாட்களாக ஹவுஸ்மேட்ஸ் ஒருவருன் ஒருவர் வேடங்களை அணிந்து கொண்டு அவர்களை போல நடக்க வேண்டும் என்பதே டாஸ்க். டாஸ்க்கின் இறுதியில் வொர்ஸ்ட் பெர்ஃபாமன்ஸ் யார் என பிக்பாஸ் கேள்வி கேட்க ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் விசித்ராவையும், அர்ச்சனாவையும் தேர்வு செய்கின்றனர்.
இதனால் கடுப்பான விசித்ரா, விசித்ரா பார்ட் 2 பாக்கபோறீங்க என ஆவேசமாக தெரிவித்தார். இதனால் பிக்பாஸ் வீட்டில் அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். விசித்ராவின் வேறு அவதாரத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதால் அவரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.