'என் ஹீரோ' என தன் காதலை உறுதி செய்த பிக்பாஸ் அர்ச்சனா!

Archana Ravichandran
Archana Ravichandran

பிக்பாஸ் அர்ச்சனா போட்ட கமெண்டால் ரசிகர்கள் பலரும் அடுத்தடுத்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அப்படி தனக்கென பெரிய கூட்டத்தை உருவாக்கி கொண்டவர் தான் அர்ச்சனா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசனில் கலந்து கொண்டு, அதன் டைட்டில் வின்னராக மாறியவர் அர்ச்சனா. வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்து பிக்பாஸ் டைட்டில் வின்னர் தட்டிச்சென்றவர் என்ற பெருமை அர்ச்சனாவை சேரும்.

25 வயதான அர்ச்சனா ரவிச்சந்திரன், டைனமிக் என்ற நிகழ்ச்சியில் சன் டிவியில் வீடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார். அவர் தனது துடிப்பான ஆளுமையை அதில் வெளிப்படுத்தினார். அதனால் ரசிகர்கள் அவரை விரும்ப ஆரம்பித்தார்கள்.

அவரது ஆரம்ப நாட்களில், அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் தோன்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அடுத்த கட்டமாக அவர் குறிப்பாக ' ராஜா ராணி 2 ' இல் பங்கேற்றார். விஜய் டெலிவிஷனின் 'முரட்டு சிங்கிள்ஸ் ' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி பெயர் எடுத்தார். இந்த பெயரோடு தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை தட்டி சென்றார்.

மிகவும் ஜாலியாக இருக்கும் இவர் எப்போது திருமணம் செய்து கொள்வார் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும் அவர் பாரதி கண்ணம்மா 1 சீரியல் ஹீரோ அருணை காதலித்து வருவதாக அடிக்கடி பேச்சுக்கள் எழுந்து வருகிறது. ஆனால் இருவரும் அதை உறுதியாக சொல்லவே இல்லை.

இதையும் படியுங்கள்:
விஜய்யின் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கு சூப்பர் சர்ப்ரைஸ்... ரீ-ரிலீசாகும் மாஸ் படம்!
Archana Ravichandran

இதனிடையே சமீபத்தில் அருண் பிரசாத் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியீட்டு இருந்தார். அதற்கு அர்ச்சனா பதிவு செய்த கமெண்ட் தான் இருவரும் காதலிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Archana Ravichandran Comment
Archana Ravichandran Comment

அந்த பதிவில் அர்ச்சனா, என் ஹீரோவை புகைப்படம் எடுத்ததற்கு நன்றி என்று கமெண்ட் செய்துள்ளார். இதன் மூலம் இருவரும் காதலிப்பதை ரசிகர்கள் பாதியளவு உறுதி செய்துள்ளனர். மேலும், விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சில ரசிகர்கள் எப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளீர்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com