விஜய்யின் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கு சூப்பர் சர்ப்ரைஸ்... ரீ-ரிலீசாகும் மாஸ் படம்!

Vijay & Nayanthara
Vijay's villu movie

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கில்லி படம் போல் விஜய்யின் பழைய படம் ஒன்று ரீ ரிலீசாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். விஜய்க்கு தமிழில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இப்படி கோடிகணக்கான மக்களின் அன்பை பெற்ற நடிகர் விஜய், திடீரென சினிமாவில் விலகுவதாக அறிவித்தார். மேலும் அரசியலில் எண்ட்ரி கொடுத்து தனது கட்சிக்கு 'தமிழக வெற்றிக்கழகம்' என பெயரிட்டுள்ளார். என்னதான் விஜய்யை அரசியலில் வந்தாலும், திரையில் காணுவது இனி கிடையாது என்பது ரசிகர்களுக்கு பேரிடியாக தான் இருக்கும்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இன்னும் ஒரு படம் மட்டுமே நடிப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் குறித்த எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இது தான் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

சமீபகாலமாகவே புது படங்களின் வரவை விட பழைய படங்களின் ரி-ரிலீஸ் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா காலகட்டத்தில் நீண்ட லாக்டவ்னுக்கு பிறகு திரையரங்கிற்கு வரும் மக்களின் கூட்டம் குறைவாக இருந்த காரணத்தினால் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்தனர், இதனால் மக்கள் கூட்டம் மீண்டும் திரையரங்குகளை நோக்கி வர தொடங்கியது. தற்போது அதே போல் மீண்டும் பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
Vijay & Nayanthara

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான கில்லி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. கில்லி படம் வெளியான முதல் நாள் FDFS காட்சி போல, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் வெளியான பிறகும் ரசிகர்கள் FDFS போல கில்லி படத்தை கொண்டாடினார்கள். ரீ-ரிலிஸ் செய்யப்பட்டு 30 கோடி வசூல் வேட்டை நடத்தியது கில்லி. தமிழ்நாட்டில் இத்தனை கோடி வசூல் செய்த முதல் ரீ-ரிலீஸ் படம் என்ற பெருமையை கில்லி திரைப்படம் பெற்றது.

மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரையரங்குகளில் அஜித் நடிப்பில் உருவான ‘தீனா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. தொடர்ந்து விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூலை 21 ஆம் தேதி விஜய், நயன்தாரா நடிப்பில் உருவான ‘வில்லு’ திரைப்பம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து விஜய் ரசிகர்கள் குசியாக உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com