பிக்பாஸில் இதற்கு முன் இல்லாத வகையில் ஒரு புது விஷயம் வரப்போகுது!

Biggboss 8
Biggboss 8
Published on

பிக்பாஸ் சீசன் 8 விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், இதற்கு முன் எந்த சீசனிலும் இல்லாத ஒரு விஷயத்தை இந்த சீசனில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

ஏராளமான ரசிகர்களை கொண்ட பிக்பாஸ் தொடர் 7 சீசன்களைக் கடந்து 8வது சீசன் ஆரம்பமாகவுள்ளது. 7 சீசன்களைத் தொகுத்து வழங்கிய கமலஹாசன், இம்முறை நிகழ்ச்சியைவிட்டு வெளியேறினார். கடந்த சீசனில் கமலஹாசன் ஒரு பக்கமே பேசுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

மேலும் சிலர் கமலை ட்ரோல் போட்டுத் தாக்கினர். மறுபக்கம் கமல் படத்திலும் அரசியலிலும் மிகவும் பிஸியாக இருந்து வந்தார். ஆகையால், அப்போதே அவர் நிகழ்ச்சியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது.  அந்தவகையில் இந்த சீசனில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுக்கவுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ மூலம் வெளியானது.

இதனையடுத்து சமீபத்தில் நிகழ்ச்சி தொடங்குவதற்கான தேதி அறிவிக்கப்பட்டது. வரும் அக்டோபர் 6ம் தேதி பிரம்மாண்ட தொடக்கம் என்ற அறிவிப்பு வெளியானது.

தற்போது பிக்பாஸ் செட் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், விஜய் டிவி போட்டியாளர்களை தேர்வு செய்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த வாரம் குக் வித் கோமாளி முடிந்தவுடன் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.

இதையும் படியுங்கள்:
ரோஹித்துக்குப் பின் டெஸ்ட் கேப்டனாகும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்?
Biggboss 8

இதற்கு முன்னர் ஒளிபரப்பப்பட்ட 7 சீசன்களில் பெரியளவு பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை போட்டியாளர்களை மீண்டும் களமிறக்க திட்டமிட்டுள்ளனராம். அதேபோல் இந்த சீசனில் புதிதாக நடிகர் ரஞ்சித், நடிகர் ரியாஸ்கான், நண்டு ஜெகன், குக் வித் கோமாளி சுனிதா, சார்பட்டா பரம்பரை சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டவர்களும் இந்த சீசனில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இதற்கு முன் இல்லாத வகையில் இந்த புதிய சீசனில் ஒரு விஷயத்தை கொண்டுவரப்போகிறார்களாம். அதாவது இதற்கு முன் அனைத்து சீசனிலும் இருந்த போட்டியாளர்களை ஒருபக்கம், மறுபக்கம் மக்களை அமரவைத்து அவர்களுக்கு இடையில் ஒரு விவாத நிகழ்ச்சி நடத்தப்போவதாகவும், அது தொடக்கவிழாவில் ஒளிபரப்பாகும் என்ற செய்திகளும் வந்துள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com