நிக்சனை கலாய்த்த தந்தை.. மாயா, பூர்ணிமாவை கண்ணால் எரித்த விஷ்ணு அக்கா.. எதிர்பார்ப்பை தூண்டும் பிக்பாஸ் 7!

நிக்சனை கலாய்த்த தந்தை.. மாயா, பூர்ணிமாவை கண்ணால் எரித்த விஷ்ணு அக்கா.. எதிர்பார்ப்பை தூண்டும் பிக்பாஸ் 7!

பிக்பாஸில் இந்த வாரம் அனைவருக்கும் பிடித்த ஒன்றான ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி 79 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் வெளியாகும் பிக்பாஸ் முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படும் விதமாக அமைந்துள்ளது. அந்த வகையில் இன்று வெளியான புரோமோ ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. அதவாது அனைத்து சீசன்களிலும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த வாரம் தான் ப்ரீஸ் டாஸ்க் வாரம். பிக்பாஸ் 7வது சீசனின் ப்ரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகிறது. இது தொடர்பான புரோமோக்கள் வெளியாகியுள்ளது.

நேற்று முதலில் பூர்ணிமாவின் அம்மா உள்ளே வந்தார். தொடர்ந்து அர்ச்சனா, விக்ரம், விஜய் வர்மாவின் பெற்றோர் ஒரே நேரத்தில் உள்ளே சென்று குதூகலித்தனர். எந்த சீசனிலும் அனைத்து பேரும் ஒன்றாக அனுப்பியதில்லை. 4 பேரின் குடும்பத்தாரும் மகிழ்ச்சியாக பேசி விளையாடியதில் போட்டியாளர்கள் குதூகலமாகினர்.

இந்த நிலையில், இன்று வெளியான புரோமோக்களில் நிக்சனின் தந்தை உள்ளே வருகிறார். பலரும் எதிர்பார்த்த நிக்சனின் குடும்பத்தினர் நடந்து கொண்டதே வேறு. கடந்த சீசன்களில் எதோ பிரச்சனை ஏற்பட்டால் உள்ளே வரும் அவர்கள் பெற்றோர், பிள்ளைகளை கண்டிப்பார்கள். அப்படி வினுஷா, ஐஷு பிரச்சனை குறித்து நிக்சன் தந்தை கேட்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் நேர்மாறாக நிக்சனை கலாய்த்து தள்ளுகிறார்.

இதனை பார்த்த மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க விஷ்ணுவின் குடும்பத்தாரும் உள்ளே செல்கிறார்கள். அவர்களுடன் அறவே சேராதே என மாயா, பூர்ணிமா குறித்து பேசுகிறார் விஷ்ணுவின் சகோதரி. அவர்கள் இருவரும் தோழிகள் நீ, அதற்குள் செல்லாதே என சொல்கிறார். தொடர்ந்து மாயாவும், பூர்ணிமாவும் விஷ்ணுவின் சகோதரி தன்னை பார்த்தாலே முறைக்கிறார் என புலம்புகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com