இன்று காத்திருக்கும் சம்பவம்.. வெளியானது பிக்பாஸ் புரோமோ!

Bigg Boss Season 7 tamil
Bigg Boss Season 7 tamil

பிக்பாஸ் வீடு வெற்றிகரமாக 75 நாட்களை கடந்த நிலையில் சனிக்கிழமையான இன்று கமல்ஹாசன் பல சம்பவங்களை செய்யப்போகிறார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 6 சீசன்களை கடந்த பிக்பாஸ், தற்போது 7வது சீசனை தொட்டுள்ளது. இந்த சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 70 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் பிக்பாஸ் முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படும் விதமாக அமைந்துள்ளது. அதன் படி இன்று வெளியான புரோமோவில் கமல்ஹாசன் போட்டியாளர்களை வெளுத்து வாங்க போகிறார் என தெரிகிறது.

கடந்த வார இறுதியிலேயே கெட்ட வார்த்தை பேசிய அனைவருக்கும் ஸ்ட்ரைக் கொடுத்தார். தொடர்ந்து கமல்ஹாசனை பார்க்கமாலேயே மிட் வீக் எலிமினேஷன் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்:
பிக்பாஸின் நடுவார எலிமினேஷன்.. வெளியேறியது இவரா?
Bigg Boss Season 7 tamil

அதில் அனன்யா ராவ் வெளியேறினார். தொடர்ந்து வார இறுதியில் மற்றொரு எலிமினேஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று வெளியான புரோமோவில், கமல் அனைவரையும் புரிந்து கொண்டு மக்களிடம் பேசுகிறார், அதில், வேஷம் கலைந்த பிறகு அனைவரையும் எப்படி காலி செய்யலாம் என நினைக்கிறார்கள் என்று கூறுகிறார். இதன் மூலம் இன்று அனைவருக்கும் ஒரு சம்பவம் காத்திருக்கு என தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com