பிக்பாஸ் சீசன் 8 – ரசிகர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி… வெளியான தகவல்!

Biggboss season 8
Biggboss season 8
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

பிக்பாஸ் சீசன் 8 தொடர் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. அந்தவகையில் இதுவரை எந்த சீசனிலும் நடக்காத ஒரு விஷயத்தை, இந்த சீசனில் எதிர்பார்க்கமுடியும் என்ற செய்திகள் வந்துள்ளன.

விஜய் டிவியில் ஒவ்வொருமுறையும் மக்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் தொடர். மொத்தம் இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. 7 சீசனையும் தொகுத்து வழங்கியவர் உலகநாயகன் கமலஹாசன். வாரம் ஐந்து நாட்களைவிட கமல் வரும் இரண்டு நாட்கள் மட்டும் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு கிடைக்கும். கடந்த சீசனில் கமலஹாசன் ஒரு பக்கமே பேசுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

மேலும் சிலர் கமலை ட்ரோல் போட்டுத் தாக்கினர். மறுபக்கம் கமல் படத்திலும் அரசியலிலும் மிகவும் பிஸியாக இருந்து வந்தார். ஆகையால், அப்போதே அவர் நிகழ்ச்சியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. அந்தவகையில் இந்த சீசனிலிருந்து அவர் விலகியது உறுதியானது.

அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுக்க உள்ளார். இதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டது. விஜய் சேதுபதி மாஸான லுக்குடன் அறிமுகமாவதுபோல் ப்ரோமோ அமைந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு ரூ. 50 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மாற்றப்பட்டதே ஒரு மாபெரும் ட்விஸ்ட்டாக அமைந்தது. தற்போது மேலும் ஒரு ட்விஸ்ட் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதையும் படியுங்கள்:
மாரி செல்வராஜை வாழை பண்ணவேணாம்னு சொன்னேன் – இயக்குநர் ராம் சொன்ன தகவல்!
Biggboss season 8

இப்போது பிக்பாஸ் சீசன் 8ன் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் விஜய் டிவி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இதற்கு முன்னர் ஒளிபரப்பப்பட்ட 7 சீசன்களில் பெரியளவு பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை போட்டியாளர்களை மீண்டும் களமிறக்க திட்டமிட்டுள்ளனராம். அவர்கள் மீண்டும் சீசன் 8ல் வந்தால், பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே கூற வேண்டும். மேலும் சீனியர் என்ற முறையில் புதிதாக வருபவர்களிடம் எப்படி நடந்துக்கொள்ள போகிறார்களோ தெரியவில்லை.

சீசன் 8ல் பல புது முயற்சிகள் எடுக்கப்படுவதால், பல எதிர்பார்ப்புகளையும் தாங்கி நிற்கிறது.

logo
Kalki Online
kalkionline.com