விரைவில் பிக்பாஸ் 8... லீக்கான போட்டியாளர்கள் லிஸ்ட்!

Big Boss 8
Big Boss 8
Published on

பிக் பாஸ் சீசன் 8 விரைவில் தொடங்கவுள்ள நிலையில், போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசனுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இதுவரை 6 சீசன்கள் கடந்த நிலையில் 2023ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி 7வது சீசன் தொடங்கியது. பல பல டவிஸ்ட்களை அடுக்கி தள்ளிய இந்த சீசனில் கடைசி வரை அந்த ட்விஸ்ட் நீடித்தது. 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டு அசத்தலாக விளையாடிய நிலையில் தினேஷ், மாயா, அர்ச்சனா, மணி, விஷ்ணு ஆகியோர் டாப் 5 போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் விஜய் அசத்தலாக விளையாடி டாப் 6இல் இருந்தார். எந்த சீசனுக்கும் இல்லாத வரவேற்பு இந்த சீசனுக்கு இருந்ததற்கு முக்கிய காரணம் பிரதீப் வெளியேற்றப்பட்டது தான். ரெட் கார்ட் கொடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சீசனின் டைட்டில் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். இவரது வெற்றியை பிரதீப் ரசிகர்கள் மிகவும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

புல்லி கேங் என்று சொல்லப்படும் மாயா டீம் யாரும் வெற்றி பெற கூடாது என்பதே பலருடைய கனவாக இருந்தது. இவர்களின் சதி வேலையால் தான் பிரதீப் வெளியேறிவிட்டதாகவும் குமுறினர். இப்படி போன சீசன் வெறித்தனத்தால் அடுத்த சீசன் எப்போது வரும் என ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பேரிடியாக வந்தது தொகுப்பாளர் மாற்றம் தான். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் உலகநாயகன் கமலஹாசன் தான். ஆனால் அதிரடியாக சீசன் 8 நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கப் போவதில்லை என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தன்னுடைய பணிகள் காரணமாக வெளியேறுவதாகவும் அறிக்கை வெளியிட்டு அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் உலகநாயகன் கமலஹாசன் தான். ஆனால் அதிரடியாக சீசன் 8 நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கப் போவதில்லை என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தன்னுடைய பணிகள் காரணமாக வெளியேறுவதாகவும் அறிக்கை வெளியிட்டு அறிவித்தார். இதைத்தொடர்ந்து விஜய் டிவி தரப்பில் இருந்தும் கமலஹாசன் விலகுவதை உறுதி செய்தனர். கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகிய பின்னர், அவருக்கு பதில் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சரத்குமார், விஜய் சேதுபதி, நயன்தாரா, அரவிந்த்சாமி, ரம்யா கிருஷ்ணன், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற பல நடிகர்களின் பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்றது.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் முடிவுக்கு வரும் 3 சீரியல்கள்... ரசிகர்கள் ஷாக்!
Big Boss 8

இந்த நிலையில் பிக்பாஸ் 8வது சீசனில் உறுதி செய்யப்பட்டுள்ள 3 போட்டியாளர் என ஒரு தகவல் ரசிகர்களிடம் வலம் வருகிறது. கடந்த 7வது சீசனில் வைல்ட் கார்ட்டு என்ட்ரி கொடுத்து அசத்தி வெற்றிப்பெற்ற அர்ச்சனாவின் காதலர் என்று கூறப்படும், பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் மற்றும் அதே தொடரில் வில்லியாக கலக்கிய பரீனா இருவரும் உறுதியானதாக கூறப்படுகிறது. பரீனா தற்போது குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டிடிஎப் வாசனின் காதலி ஷோயாவும் பங்கேற்கவுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com