

உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவப் பிரச்சனை காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசன் 10 போட்டியாளர் பிளாக் பாண்டி நள்ளிரவில் பிக் பாஸ் வீட்டிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
19 போட்டியாளருடன் செப்டம்பர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி அனல் பறக்கும் விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து இரவு பகலாக உழைத்து மக்களை என்டர்டெயின் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிளாக் பாண்டி போட்டியாளர் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
விஜய் டிவியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 10ல் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி 6ஆம் தேதி அமர்க்களமாக தொடங்கப்பட்டது. பிளாக் பாண்டி வெளியேறியதால் தற்பொழுது போட்டியாளர்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது. இந்த பிக் பாஸ் சீசன் 10ல் தான் எந்த சீசனிலும் இல்லாதபடி பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே எவிக்ட் ஆகி அறிமுக மேடையில் இருந்தபடியே வெளியேறி உள்ளனர்.
இப்படி இந்த சீசனின் முதல் ஆளாக சீரியல் நடிகை ஷப்னம் வெளியேறி உள்ளார். இப்பொழுது மேலும் ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். மீண்டும் பாண்டி வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் திரும்ப வரலாம் என்றும் கூறப்படுகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இருந்து நடிகர் பிளாக் பாண்டி கடுமையான உடல் நலக்குறைவு மற்றும் மருத்துவப் பிரச்சனை காரணமாக நள்ளிரவில் வெளியேற்றப்பட்டுள்ளார். சமையல் பணியில் ஈடுபட்டிருந்தபொழுது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டின் மருத்துவக் குழுவின் பரிந்துரைப்படி அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளாரா அல்லது முழுமையாக விலகுகிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாக் பாண்டி வீட்டில் உள்ள அனைவரிடமும் நல்ல முறையில் பழகுவதும், சண்டைகளை தீர்த்து வைப்பதுமாக இருந்துள்ளார். ஷதிகாவிற்கும் ஜான்சனுக்கும் இடையில் காரசாரமான விவாதம் ஏற்பட்ட பொழுது கூட உடனடியாக அங்கு சென்று இருவரையும் சமாதானப்படுத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார். தப்புகளை சுட்டிக் காட்டுவதும், அமைதியாகவும், பண்பாகவும் நடந்து கொள்ளும் பாண்டி இரவு 2 மணிக்கு நடைபெற்ற முதல் லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கிலும் நன்கு வேலை பார்த்துள்ளார். டாஸ்க் போர்டில் எழுதப்பட்டிருந்த பொருட்கள் தமிழில் இருந்திருந்தால் இன்றும் நன்றாக இருக்கும் என்ற நியாயமான கோரிக்கையைக் கூட முன்வைத்து இருந்தார். ஆனால் நேற்று கிச்சன் டீமிலிருந்து அனைவருக்கும் சுறுசுறுப்பாக இயங்கி உதவிக் கொண்டிருந்த அவருக்கு நள்ளிரவில் கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டும் எப்போது என்ட்ரி கொடுப்பார் என்று பிக் பாஸ் டீமின் அப்டேட்டிற்காக ஆவலுடன் நிறைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருகின்றனர்.
அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு குணமடைந்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் நுழைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.